பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 135

{2}51 போல் கிராமப்புறங்களில் விவசாயத்தோடும் விவசாயத் தொடர்பு கொண்ட தொழில்களுடனும், இதர வகைத்தெ ழில்களுடனும் ஈடுபட்டுள்ளதொழிலாளர் களின் நல்வாழ்விற்கான திட்டங்கள் வகுப்பதும்.அன்வகளை நிறைவேற்றுவதும் இந்திய சமுதாயத்தின் முக்கியமான தொரு ஜனநாயகவளர்ச்சிப் பிரச்சனையாகும். இதில் நாம் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும்.

பால் உற்பத்தித் தொழில்:

அண்மைக் காலங்களில் குறிப்பாக நாடு விடுதலை அடைந்த பின்னர் தொழில் வளர்ச்சியை ஒட்டி நகரங்களின் எண்ணிக் கை அதிகரித்து வருகிறது. நகரங்களில் மக்கள் குவியலும் அதிகரித்து வருகிறது. பெரிய நகரங்களில் உள்ள மக்களின் தேவைகளும் அதிகரித்து வருகின்றன. உணவு தானியங்கள், காய்கறிகள், எண்ணெய், பால் முதலிய தேவைகள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலத்தில் பால் உந்பத்தியை அதிகரிக்க, கிராமப்புறங்களில், கூட்டுறவு முறையில் பால் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன இந்தக் கூட்டுறவு பால் பண்ணைகள் மூலம் கிராமப்புற மக்களுக்கு பால் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. இது வெண்மைப் புரட்சி என்று கூறப்படுகிறது.

பால் மாடு வளர்த்தல் விவிசாயிகளின் துணைத் தொழிலா கவும் கிராமப்புற மக்கள் சிலரின் தனித் தொழிலாகவும் வளர்ந்துவருகின்றன. இவைதவிர தனியார்துறையிலும் கால்

நடைப்பண்ணைகள் கோழிப் பண்ணைகள் வளர்ந்து வருகின்றன.

இவ்வாறான பால் மாடுகள் வளர்ப்பதில் பல பிரச்

சனைகளும் உள்ளன. மாடுகளுக்கான தீவனம், நோய்த் தடுப்பு, கருத்தரிக்கவைத்தல், பால் விற்பனை, அதற்குரிய கட்டுபடியாகும் விலை முதலிய பிரச்சனைகள் எழுந் துள்ளன.

இன்றைய கூட்டுறவு பால் சங்கங்கள் பெரும்பாலும் பால்

உற்பத்தி சங்கங்களாகவே வளர்க்கப்படுகின்றன. அவை கள் நகரங்களுக்குப் பால் அனுப்புவதற்காகவே உருவாக் தப்படுகின்றன. இதனால் கிராமப்புற மக்களின் பால்

தேவை பாதிக்கப்படுகிறது. இதில் பால் உற்பத்தி, விநி யோகம் இரண்டும். கிராமச்சங்கங்களுக்கு இருக்கவேண்டும். பாலுக்குக் கட்டுடனடியாகும் விலை கிடைக்க வேண்டும் தீவனங்கள் தட்டு இல்லாமல் கிடைக்கவேண்டும்.

இந்தப்பண்ணைகள் சம்பந்தப்பட்ட விவசாயிகள், கிராமப் புற மக்கள், ஊழியர்கள் ஆகியோரின் பிரச்சனைகள் தனி யாகக் கவனிக்கப்பட வேண்டும்.

Yor