பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இந்திய கிராமப்புறங்களில் உள்ள இன்றைய வர்க்க அமைப்பும், வர்க்க வேறு பாடுகளும்.

வர்க்கம் என்றால் என்ன? புறநிலையாக ஒரே மாதிரியான பொருளாதார நலன்களையும் அதை ஒட்டிய அரசியல் மற்றும் சமுதாய நலன்களையும் கொண்ட ஒரு சமு தாயக் கூட்டத்தை வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம்

வர்க்க அமைப்பு சமுதாயத்தில் இருப்பது பற்றி ஐரோப்பிய சமூக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரு வர்க்க த்தின் அரசியல் பொருளாதார நலன்களை இணைத்து வர்க்க நலன் என்கிறோம்.

வர்க்க நலன்கள் வேறுபடும்போது வர்க்கங்களும் வேறு படுகின்றன. வர்க்கங்களுக்கிடையில் வேறுபாடுகள் ஏற் படும் போது அவைகளுக்கிடையில் முரண்பாடுகள் ஏற் படுகின்றன. இந்த முரண்பாடுகளினால் சில சமயங்களில் மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த வர்க்க முரண்பாடுகள் ஒன்றுக்கொன்று நேரடியாக மோதும்போது வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கின்றன.

இத்தகைய வர்க்கப் போராட்டங்களின் வரலாறே சமுதாயத்தின் வரலாறாக இருந்திருக்கிறது என்று காரல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். உதாரணமாக புராதன காலத்தில் மனிதன் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்தான். உணவு சேகரிப்பது அவனுடைய பிரதான வேலையாக இருந்தது.

இயற்கையில் கிடைத்த கல்லும் கம்பும் அவனுடைய கருவி களாக -அதாவது உற்பத்திக் கருவிகளாகவும் போர்க் கருவி களாகவும்-இருந்தன.அன்றைய சமுதாயம் காட்டுமிராண்டிச் சமுதாயமாக, நாகரிக வளர்ச்சியில்லாத சமுதாயமாக உற்பத்தி வளர்ச்சியில்லாத சமுதாயமாக இருந்தது அந்த சமுதாயத்தில் வர்க்கங்களும் இல்லை. வர்க்கப் பிரிவுகளும்