பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாச ன் O 13 7

இல்லை. எல்லோரும் ஒரே நிலையில் இருந்தார்கள். எனவே அதில் வர்க்கங்களும் வர்க்க முரண்பாடுகளும் மோதல்களும் போராட்டங்களும் இல்லாமல் இருந்தது. கிடைத்ததை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு வாழ்க்கையை நட. த்தினார்கள்.

இரண்டாவது கட்டத்தில், ஆண்டான் அடிமை சமுதாய அமைப்பு தோன்றிய காலத்தில், சமுதாயத்தில் ஆண்டான் வர்க்கம்’ அடிமை வர்க்கம் என்னும் அடிப்படையான வர்க்கப் பிரிவு தோன்றின.

இந்த சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் உற்பத்தி சக்திகளும் உற்பத்திக் கருவிகளும் பெரிய அளவில் வளர்ந்தன. மந்தை மந்தையாக ஆடு மாடுகள் வளர்க்கப்பட்டன. ஏராளமான நிலம் சாகுபடியின்கீழ் கொண்டு வரப்பட்டது.

சாகுபடி நிலத்திற்கும் ஆடு மாடுகளின் மந்தைகளுக்கும் சொந்தக்காரர்களாக அந்த சொத்துக்களின் உடமையாளர் களாக ஆண்டான்கள் இருந்தார்கள். அவர்கள் ஆலோசகர் களாக, அறிவுத்துறையினராக இருந்தார்கள்.

மறுபக்கம் நிலத்திலோ மந்தைகளிலோ எந்த விதமான சொந் தமோ, உடமையோ உரிமையோ இல்லாமல், சாகுபடி வேலைகளிலும் ஆடு மாடுகளை மேய்ப்பதிலும் கடுமையாகத் தங்கள் உழைப்பைச் செலுத்தி வந்த உழைப் பாளர்களாக அடிமைகள் இருந்தார்கள்.

அத்தகைய ஒரு சமுதாயத்தில் ஆண்டான் வர்க்கமும், அடிமை வர்க்கமும் அடிப்படை வர்க்கங்களாக இருந்தன. ஆண்டான் வர்க்கத்திற்கும் அடிமை வர்க்கத்திற்கும் இடை யில் பல வேறு நடுத்தர வர்க்கங்களும் இருந்தன.

இந்த ஆண்டான் அடிமை சமுதாயத்தில், சமுதாயத்தின் அடிப்படையான சொத்துக்கள், நிலம், ஆடு மாடுகளின் மந்தைகள் ஆகியவை ஆண்டான்களுக்குச் சொந்தமாக இருந்தன. அடிமைகளிடம் உழைப்பு சக்தி மட்டுமே இருந் தது. அடிமைகளின் உழைப்பின் மூலம் நிலத்தில் சாகுபடி யும், ஆடு மாடுகள் மேய்த்தலும் நடைபெற்றன. இவைகள் மூலம் கிடைத்த பலன் அனைத்தும் உற்பத்திப் பொருள் அனைத்தும் ஆண்டான்களுக்கே சொந்தமாக இருந்தன. அடிமைகளுக்குக் குறைந்தபட்சக் கூலி-உண்பதற்கு உண வ கஒரு நாளுக்கு நாழி தானியமும் உடுப்பதற்கு ஒரு ஆண்டிற்கு தான்கு முழத்துணியும்-கொடுக்கப்பட்டது.

ஆண்டான்கள் தங்கள் சொத்துக்களையும் சுகவாழ்வையும் பாதுகாத்துக் கொள்ள அரசியலை உண்டாக்கிக் கொண் டார்கள். சட்டம், நீதி, ஒழுக்கம், சமயம், அரசு, ஆட்சி