பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

விவசாய வளர்ச்சி:

ஆடு மாடு மேய்த்தலைத் தொடர்ந்தே அதன் சகோதரத் தொழிலாக சாகுபடித் தொழிலும் வளர்ந்தது. ஆனிரை கள் மேய்க்கும் கண்ணனும் கலப்பையைக் கருவியாகக் கொண்ட பலராமனும் சகோதரர்களாக தமது கதைகளில் வருவதைக காணலாம.

ஆனிரை கவர்தலும் காடுகளை மாற்றி விளை நிலமாக்கு வதும் நமது நாட்டின் சமுதாயப் போராட்டத்தின் பகுதி யாக நமது கதைகளில் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

படிப்படியாக ஆற்றோரங்களில் சாகுபடி தொடங்கி வளர்ந்து பரவியது. பருவ மழையை வைத்து சாகுபடி செய்யப் பட்டிருக்கிறது. பருவ மழை அதிகரித்து வெள்ளங் கள் ஏற்படுவதும், பருவ மழை தவறி வறட்சியும் பஞ்சங் களும் ஏற்படுவதும் கால நிலையின் பகுதியாக நமது மக்கள் அனுபவத்தில் கண்டார்கள்.

இத்தகைய இயற்கைச் சோதனைகள் காரணமாக மக்களின் குடிப் பெயர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன.

நீர்ப்பாசன ஏற்பாடுகள் :

இந்தியாவின் பழம் பெரும் நாகரிகத்தின் பகுதியாக நமது தாட்டின் நீர்ப்பாசன முறைகள் அபிவிருத்தி செய்யப் பட்டிருக்கின்றன. கால் வாய்களை வெட்டுவதும் நீர் நிலை களை அமைப்பதும் அரசின் கடமையாக ராஜ நீதிமுறை யில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

சித்து கங்கை சமவெளிப்பகுதிகளிலும் கலிங்கத்தில் மகா நதி தீரத்திலும் குஜராத்தில் நர்மதா நதி தீரத்திலும், ஆந்திராவில் கோதாவரி-கிருஷ்ணா நதிதிரங்களிலும் தமிழ கத்தில் காவிரி தென்பெண்ணை,பாலாறு வைகை தாமிர பரணி ஆற்றுப் பகுதிகளிலும் ஆற்றின், இருபுறங்களிலும் கால்வாய்கள் வெட்டப்பட்டு அவை மூலம் நீர்ப்பாசனத் திற்குத் தண்ணtர் கொண்டு செல்லப்பட்டன. காவிரியில் கட்டப்பட்டுள்ள கல்லனை கரிகாலன் காலத்தியது. கால்வாய்கள் மட்டுமின்றி, தமிழகத்திலும் ஆந்திராவின் சில பகுதிகளிலும் ஏராளமான பாசன ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் வெட்டப்பட்டு,ஆறுகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டுப் பாசனத்திற்குப் பன்படுத்தப் பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் விவசாய வளர்ச்சியில் பாசன ஏரிகள், குளங் கள் கண்மாய்கள் மிக முக்கிய இடம்பெற்றிருக் கின்றன. பல்லவர்களும் பாண்டிய மன்னர்களும், விஜய நகர