பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 139

ஒரு புதிய சமூகப் பொருளாதார அமைப்பு ஏற்பட்டிருக் கிறது. வரலாற்றின் வளர்ச்சியில் ஒரு புதிய கட்டம் ஏற் பட்டிருக்கிறது. இந்தப் புதிய கட்டம் ஏற்படுவதற்கு ஆண்டான் அடிமை வர்க்கங்களுக்கிடையிலான் வார்க்கப் போராட்டம் தான் காரணமாக, உந்து சக்தியாக இருந்திருக் கிறது. இதனால்தான் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே மனித சமுதாயத்தின் வரலாறாகும்’ என்று காரல் மார்க்ல் சமுதாய உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார்.

மூன்றாவது கட்டத்தில் ஆண்டான் ஆதிக்கம் ஒழிந்து, ஆண்டான் அடிமை அமைப்பு தகர்ந்து, ஒரு புதிய வகை பிரபுத்துவ அமைப்பு முறை ஏற்படுகிறது. இந்த நிலப்பிரபுத் துவ சமூகப் பொருளாதாரத்தின் உச்சியில் மன்னராட்சி

முறை ஏற்படுகிறது.

நிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதார அமைப்பு முறையில் அடிப்படை வர்க்கங்களாக இருப்பவை நிலப்பிரபுக்களும் குடியானவர்களுமாவர்.

நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கும் குடியான வர்க்கத்திற்கும் இடையில் பல வேறு நடுத் தரவர்க்கத்தினர்களும் இருந்தார் கள். உதாரணமாக கைவினைஞர்கள், வணிகர்கள் முதலிய வர்க்கப் _ பிரிவினர்களும் இருந்தார்கள் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திலும் பல தட்டுகள் (படிகள்) இருந்தன. குடியான வர்களுக்கிடையிலும் சில தட்டுகள் இருந்தன. இருப்பினும் நிலப்பிரபுக்களுக்கும் குடியானவர்களுக்கும் இடையில் இருந்த உற்பத்தி உறவுகள் தான் அந்த சமுதாயத்தின் வர்க்க உறவுகளாக இருந்தன.

இந்திய நாட்டின் சமூகப் பொருளாதார அமைப்பில் சாதி முறைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந்திய நாட்டின் சாதி முறைகள் ஆண்டான் அடிமை சமுதாயத்தில் தோற்று விக்கப்பட்டு, நிலப்பிரபுத் துவ காலத்தில் உறுதிப்பட்டு நில்ை பெற்றிருக்கிறது.

நமது நாட்டில் ஆண்டான் அடிமை அமைப்பு இருந்ததில்லை என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. இது ப்ற்றிய அதிக ஆராய்ச்சி இங்கு தேவையில்லை. இருப்பினும் ஆண்டான், அடிமை என்னும் அருமையான தமிழ்ச் சொற்கள் ஏற்பட்டி ருப்பதிலிருந்தே நிச்சயமாக அந்த வர்க்கங்களும் அந்த் வர்க்க அமைப்பும் இருந்திருக்க வேண்டும். ஆயினும் இந்திய நாடு பெரியநாடு. இதில் பிரதேசத்திற்குப் பிரதேசம் வடிவங்களில் வேறுபாடு இருந்திருக்கலாம். அதில் பண்னை அடிமை முறை பரவலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்தபடி சாதி அமைப்புகள் இந்திய சமுதாயத்தில் அப்படித் தோன்றின என்பதும் ஆய்வுக்குரிய ஒரு முக்கிய பொருளாகும்.