பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

தொழில் அடிப்படையில்-இன்னும் தெளிவாகக் கூறுவதா னால் வேலைப் பிரிவினையின் அடிப்படையில் சாதிய முறை கள் தோன்றியிருக்கலாம். அப்படியானால் சாதி அமைப்பு என்பதும் வர்க்க அமைப்பு என்பதும் ஒன்று தானா என்னும் கேள்வி எழுகிறது. இரண்டிற்கும் சில சாயல்கள் இருக்கின் றன. ஆனால் இன்றைய நிலையில் இரண்டும் ஒன்று பட்டும் வேறு பாடுகள் தோன்றியும் உள்ளன.

இன்றைய கட்டத்தில் வர்க்க ஒற்றுமை புரட்சிகர இயக்கத் தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. சாதி ஒற்றுமை என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தைப் பிளவு படுத்தி விடுகிறது. அதே சமயத்தில் மேல் சாதிக் கொடுமைகளைப் பாட்டாளி வர்க்க இயக்கம் கடுமையாக எதிர்க்கிறது. அத்தனை சாதிகளிலும் உள்ள பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி, மேல் சாதிக் கொடுமைகள் எதிர்த்து முறியடிக்கப்பட்டிருக்கின்றன.பாக்கியுள்ள சாதீயக் கொடுமைகளையும் துடைத்தெறிய வேண்டியது பாட்டாளி வர்க்கப் புரட்சிகர இயக்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இறுதியில் சோஷலிஸ் சமுதாய அமைப்பில் சாதிகளே இல்லாமல் ஒழிக்கப்பட்டு விடும் அல்லது படிப் படியாக மறைந்து விடும்.

இந்தியாவில் சாதிகளுக்கிடையிலான போராட்டங்கள் சாதிப்பாகுபாடுகளை எதிர்த்த போராட்டங்கள் ஏராள மாக நடந்திருக்கின்றன. வர்க்கம் என்பதை இந்திய சமுதாயத்திலும் நாம் தனியாகத் தான் பார்த்து படித்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

நிலப் பிரபுத்துவ சமுதாயத்தில் அடிப்படை வர்க்கங்களாக இருந்தவை நிலப் பிரபுக்களும் குடியானவர்களுமாவர்.

நிலப்பிரபுத்துவ மன்னராட்சி முறையில் குறுநில மன்னர்கள் சிறுநில மன்னர்கள் பெரு நில மன்னர்கள் என்று பல தட்டு கள் இருந்திருக்கின்றன. மன்னனுக்குத் தமிழில் காவலன் என்றும் பெயர் உண்டு; காவலன் என்பது காரணப் பெயர்.

காவலர்களே தங்கள் கடமைகளை மறந்து விட்டால்வேலியே பயிரை மேய்ந்து விட்டால் அந்த அமைப்பையே மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

மேலைநாடுகளில் பதினேழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் உள்ள காலத்தில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்திற்கு எதிராக மிகப்பெரிய வர்க்கப்போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை எதிர்த்துக்குடியானவர்கள், பண்ணை அடிமைகள் நடத்திய வர்க்கப் போராட்டத்தில் குடியானவர்களுக்கு, பண்ணை அடிமைகளுக்கு நடுத்தரவர்க்க வர்த்தகர்கள், முதலாளிகள்,