பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 O கிராமப் புறப் பாட்டாளிகளை நோக்கி ..

முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவத்துடன் சமரசம் செய்து இக்ாண்டுள்ள பல நாடுகளில் கிராமப்புறங்களில் பல வேறு வர்க்கப் பிரிவுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுவதற்குமுன் பொது iொன நிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதார அமைப்பு இருந்தது. அதில் பெரு நில மன்னர்கள், சிறு நிலமன்னர்கள், குறு நில் மன்னர்கள், சிறிய பெரிய நிலவுடமையாளர்கள். சாகுபடியாளர்கள், பண்ணையாட்கள், கைவினைஞர்கள், வன்கர்கள், சிறு வியாபாரிகள், முதலிய பல வர்க்கங்கள்

இருந்தன. e

அத்துடன் இந்திய சமுதாய அமைப்பில் சாதி அமைப்பு களும் இருந்தன். இந்திய சமுதாயத்தில் வர்க்கு முரண்பாடு களும் மோதல்களும் இருந்திருக்கின்றன. சாதி வேறுபாடு களும் முரண்பாடுகளும் மோதல்களும் இருந்திருக்கின்றன.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் வர்க்கங் கிளின் அமைப்புகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய வர்க்கங்கள் தோன்றின.

பிரிட்டிஷ் முதலாளிகள்’ பிரிட்டிஷ் வர்த்தகர்கள், அவர் களுடைய் தொழில் வர்த்தக அமைப்புகளுக்கு உதவிகரமாக, துணையாக இருந்த ஏஜண்டுகள் தரகர்களும் புதிதாகத் தோன்றினார்கள்.

இந்தத் தரகர்கள், பின்னர் படிப்படியாக தரகு முதலாளி களாகவும் வளர்ந்தார்கள்.

பிரிட்டிஷ் வர்த்தகம் தொழில் ஆட்சி நிர்வாகம் ஆகிய வற்றை நடத்துவதற்கு ஆங்கிலக் கல்வியைக் கற்ற நடுத்தர வர்க்கம் தோன்றியது.

இந்தியாவின் வளர்ச்சியினும் வர்த்தகம், ஆங்கிலக் கல்வி ஆகியவற்றின் காரணமாக சொந்தமாக நவீன முறையில் தொழில், வர்த்தகம் ஆகியவற்றைத் தொடங்கிய இந்திய சுதேசி முதலாளிகள் வர்க்கமும் தோன்றி வளர்ந்தது. நவீனமான் பிரிட்டிஷ் வர்த்த்க நிறுவனங்கள், போக்கு வரத்துத்துறை, நவீன தொழில்கள் முதலியவற்றில் பணி யாற்றிய நவீன தொழிலாளி வர்க்கமும் புதிதாகத் தோன்றியது.

வர்க்க நலன்களில் நவீன இந்தியத் தொழிலாளி வர்க்கம் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கும் இந்திய சுதேசி முதலாளிகளுக் கும் எதிராக நிற்கிறது. இந்திய தேசீய நலன்களில் நவீன இந்தியத் தொழிலாளிவர்க்கம் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு எதிராக மட்டும் நிற்கிறது.