பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 143

பிரிட்டிஷ் ஆட்சியின் காரணமாக இந்தியாவின் கிராமப் புறங்களிலும் வர்க்கங்களின் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்தியாவை முழுவதையுமோ அல்லது பெரும் பகுதியையோ ஆண்டு கொண்டிருந்த பெரும் நில மன்னர் கள் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட சுதேசி மன்னர்கள் வர்க்கம் அந்நிய ஆட்சியால் தோற்றுவிக்கப்பட்டது. அத்துடன் கிராமப்புறங்களில் ஜமீன்தார் முறையைக் கொண்டு வந்து, புதிய முறையிலான ஜமீன்தார்கள், ஜாகீர் தார்கள், ஜன்மிகள், இனாம்தார்கள் முதலிய பல பெயர் களில் புதிய நிலப்பிரபுக்கள் வர்க்கம் தோற்றுவிக்கப் பட்டது. ரயத்து வாரி பகுதிகளில் அரசு நேரடியாக நிலப் பட்டா கொடுத்து புதிய நிலவுடமையாளர் வர்க்கத்தை அந்நிய ஆட்சி உருவாக்கியது. அத்தகைய நேரடி நில உடமையாளர்களில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத் திற்கு பட்டா உரிமையாளர்களாக உள்ள பெரிய நிலச் சுவான் வர்க்கம் உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் பணக் காரவிவசாயிகள், நடுத்தர விவசாயிகள், சிறு நில விவசாயி கள், வாரம்-குத்தகை சாகுபடி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகிய வர்க்கப் பிரிவுகளும் கிராமப் புறங் களில் ஏற்பட்டன.

சுதந்திரத்திற்குப் பின்னர்

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நமது கிராமப்புற அமைப் பில் மேலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. முதலில்/சுதேசி

மன்னர் முறை ஒழிக்கப்பட்டன. சட்ட பூர்வமான ஜமீன் தாரி முறை ஒழிக்கப்பட்டது. பல மாநிலங்களில் நில உச்ச வரம்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு நிலவுடமை

அளவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. அத்துடன் விவசாய உற்பத்தி உறவுகளில் முதலாளித்துவ உறவுகளும் ஏற் பட்டுள்ளது.

முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் என்பது, முதலீடு, கூலி உழைப்பு, மார்க்கட்டிற்காக உற்பத்தி, நவீன உற்பத்திக் கருவிகள் ஆகியவைகள் அடங்கியதாகும். இந்த அம்சங்கள் இன்றைய நமது நாட்டு விவசாயத் துறையில் வந்துள்ளன. பசுமைப் புரட்சி என்னும் பெயரில் நமது நாட்டு விவசாயத் துறையில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் ஆதிக்கத் திற்கு வந்துள்ளது. இது பற்றி முந்திய அத்தியாயங் களில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

நிலமும் விற்பனைப் பொருளாக ஆகி விட்டது. நிலத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விவசாயத் துறையில் நிலத்தின் விலை என்பது ஒரு நிலையான மூலதன மாகக் கணக்கிடலாம்.

அம்துடன் நமது நாட்டு விவசாயத்துறையில் கிணறு,