பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

பம்புசெட்டுகள், டிராக்டர்கள், ரசாயன உரம், பூச்சி மருந்து, ஸ்பிரேயர், முதலியகருவிகளும் அவைகளுக்கான முதலீடுகளும் செயல் முறைக்கு வந்துள்ளன. இந்தக்கருவி களும் இடு பொருள்களும் இன்றைய மார்க்கெட்டிலிருந்து தான் விவசாயிகள் வாங்கவேண்டியதிருக்கிறது.

விவசாயத் தொழிலாளர்கள் பழைய பண்ணை அடிமை முறையில் இல்லாமல் சுதந்திரமான கூலிஉழைப்பாளியாக மாறியிருக்கிறார்கள். பெரும்பாலும் கூலி நிர்ணய அடிப் படையில் விவசாய வேலைகள் நடைபெறுகின்றன.

விவசாய உற்பத்திப் பொருள்கள் அனைத்தும் மார்க் கெட்டிற்கு விற்பனைக்குச் செல்கிறது. இன்றைய முதாளித்துவ மார்க்கெட்டைச் சார்ந்தே விவசாய உற் பத்திப் பொருள்களின் விலை இருக்கிறது.அதனால் விவசாயி களின் வருமானம் என்பது முதலாளித்துவ மார்க்கெட்டில் தனது உற்பத்திப்பொருள்களுக்குக் கிடைக்கும் விலையைப் பொறுத்தே இருக்கிறது.

இத்தகைய நிலைமைகள் இந்திய கிராமப்புறங்களிலுள்ள மக்களின் வர்க்கத் தன்மையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து புதிய வர்க்க உறவுகளை ஏற்படுத்தியிருக் கின்றன.

இந்திய நாட்டின் கிராமப் புறங்களில் இன்றைய நிலையில் கீழ்க்கண்டவாறு வர்க்க அமைப்பு இடம் பெற்றுள்ளது.

1. விவசாயத் தொழிலாளர்கள்:

இவர்கள் தான் கிராமப்புறப் பாட்டாளிகளின் அடிப்படை வர்க்கமாக இருக்கிறார்கன். விவசாயத் தொழிலாளர்கள் என்பவர்கள் எந்த விதமான சொத்துடமையும் இல்லாமல், தங்களுடைய உழைப்பு சக்தியை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவர்களாவர். இன்றைய இந்திய நிலைமைகளில் விவசாயத்தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலையோ, நிர்ணயமான கூலியோ இல்லை. வியாதி, முதுமை, விபத்துக் காலங்களில் பாதுகாப்பு எதுவும் இல்லை. இவர்களுடைய உழைப்பிலும் பழைய உழைப்பு முறைகள் அதிகம் நீடிப்ப தால், உழைப்பின் உற்பத்தித் திறனும் குறைவாகவே உள்ளது. இன்றைய இந்தியாவில் விவசாயத் தொழிலாளர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப் பால் விவசாயத் தொழிலின் மீதான மனித அழுத்தம் அதிக மாகிறது. வேலையிழப்புகளால் பாதிக்கப்படும் இதர கிராமப் புற உதிரிப் பாட்டாளிகளும் இதில்சேர்ந்து இந்த