பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் () 149

அமைப்புகளில் சலவை, முடித்திருத்தம் முதலிய பணி யாற்றும் தொழிலாளர்களும் கிராமப்புற உதிரிப்பாட்டாளி களாவர் .

கிராமப்புற உதிரிப் பாட்டாளிகள் பொதுவாக உதிரி வர்க்க மாகவே இருக்கிறார்கள். அவர்களுட்ைய தொழில் பிரிவு களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. இருப்பினும் அவர்களுக்கு வேலைப் பாது காப்பு, ஊதிய வசதிகள், சமூகப் பாதுகாப்பு கல்வி முதலிய அடிப்படைப் பிரச்சனைகளில், சமுதாயத்தோடு, ஆட்சி அமைப்போடு சம்பந்தப்பட்டிருப்பதால் அவர் களுடைய வர்க்க நலன்களில் ஒரே தன்மை இருக்கிறது.

இந்த உதிரிப் பாட்டாளிகள் உதிரியாகப் பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டிருப்பதால் இவர்கள் ஒன்று சேருவது கடினமாக இருக்கிறது. அத்துடன் இவர்கள் ஒரே முதல்ாளியின் கீழே ஒரே நிறுவனத்தின் கீழே இல்லை. அதனால் இவர்களுடைய வர்க்க எதிரியை குறிப்பாக யார் என்று சுட்டிக்காட்ட முடியாமல் இருக்

கிறது.

முதலாளித்துவ அமைப்பே நமது நாட்டின் உதிரிப் பாட்டாளி வர்க்கத்தி ற்கும் பொது எதிரியாக உள்ளது.

தமது நாட்டின் முதலாளித்துவப் பாதையில் ஏகாதி பத்தியத்தின் தலையீடும் ஏக போக முதலாளித்துவத் தின் செல்வாக்குப் பதிவும் உள்ளது. எனவே ஏகாதி பத்திய பன்னாட்டுக் கூட்டு நிறுவன ஏகபோக முதலாளித் துவச் சுரண்டலுக்கு எதிராக உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் எதிர்ப்பையும் கூர்மைப் படுத்த வேண்டும்.

நடுத்தர விவசாயிகள்:

இவர்கள் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர நிலவுடமை யாளர்களாவர். இவர்களுக்கு ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் வரைநிலம் இருக்கும். ஏர் மாடு, கால்நடைகள் இவர்களுக்குச் சொந்தமாக இருக்கும். இவர்களுடைய நில வருமானம், பொதுவாக இவர்களுக்கு வாழ்க்கைக்குப் போதுமான தாக இருக்கும். நல்ல பருவ நிலை, நல்ல விளைச்சல் விலை உள்ள காலங்களில் இவர்களுக்கு சில நேரங்களில் உபரியும் கூட கிடைக்கலாம்.

இவர்களும் பெரும்பாலும் தங்கள் விவசாயத்தின் நிர் வாகத்தைத் தாங்களே நடத்துவார்கள். தங்கள் நிலத் தில் தாங்களும் உழைப்பார்கன், விவசாயத் தொழிலாளர் களையும் வேலைக்கு அமர்த்தி வேலை வாங்குவார்கள். இவர்கள் நமது கிராமப்புறங்களில் ஒரளவு செல்வாக்குப்