பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

இல்லாமல் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் பனக் காரவிவசாயிகளும்பாதிக்கப்பட்டு கடனாளிகளாகியுள்ளார் கள் எனக்கூறலாம்.

விவசாயத்துறையில் முதலாளித்துவ மார்க்கட் சுரண்டல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிர்த்துள்ள போராட்டத்தில் இவர்களும் சேருகிறார்கள்.

முதலாளித்துவ மார்க்கட் பிடிப்பில் உள்ள இந்திய முதலா வளித்துவத்திற்கும், கிராமப்புற பணக்கார விவசாயிகளுக்கும் இடையிலுள்ள முரண்பாடு மிகமுக்கிய முரண்பாடுகளில் ஒன்றாகும். இதில் கிராமப்புற பணக்கார விவசாயிகளின் நலன்களும், இந்திய முதலாளித்துவத்தின் பொது நலன் களும் எந்த விதத்திலும் ஒத்துப் போகாது. இந்த உள் முரண்பாடு மேலும் மேலும் தீவிரமடையும். அது முதலாளித்வ ஒழிப்பிலேதான் தீரும். எனவே கிராமப் புறங்களில் உள்ள பணக்கார விவசாயிகளும் இந்திய ஜன நாயகப்புரட்சியில் பங்கு வகிக்கிறார்கள். இந்திப்பகுதி ஒரு ஊசலாட்டமான - பகுதிதான் என்றாலும், ஜனநாயகப் புரட்சியில், இந்திய முதலாளித்வப் பாதைக்கு எதிரான போராட்டத்தில் இவர்களும் கட்டாயம் இன்னக்கப்பட வேண்டியவர்களாகும்.

7. நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்கள்:

ரயத்துவாரிபகுதிகளில்இருந்த பெரிய நிலச்சுவான்தார்கன், ஜமீன்தாரர்கள் சுதேசி மன்னர்களின் பண்ணை. நிலங்கள், கோவில்கள் மடங்கள் மற்றும் மத நிறுவனங்களுக்குச் குெருந்தமான நிலங்கள், ஆச்சவரம்புச் சட்டங்களிலிருந்து விதிவிலக்கு பெற்ற நிலவுடமையாளர்கள், பின்ாமி நிலவுடமையாளர்கள் முதலிய பகுதியினர், சில இடங் களில் இன்னும் குவியலாக நிலங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவைகள் எல்லாம் வாரம் குத்தைகைக்கு சாகுபடி செய்யப்படுகிறது. இவையெல் லாம் நிலப்பிரபுத்வமிச்ச சொச்சங்களாகும். இவையெல் லாம் நிலச் சீர்திருத்தச் சட்டங்களின் கீழ் கொண்டுவரப் பட்டு முழுமையாக ஒழிக்கப்படவேண்டியவைகளாகும். அர சாங்கம் நிலச் சீர்திருத்தம் பற்றி எவ்வளவுதான் உரக்கக் கூவினாலும், இன்னும் இந்த நிலப்பிரபுத்வ் நிலக்குவியல் நாட்டின் பல பகுதிகளில் நீடிக்கின்றன. அவைகள் எல்லாம் நிலமில்லாதவிவசாயிகளுக்கு சொந்தமாக்கப்பட வேண்டும்.

நிலவிநியோகத்தில் முழுமை பெறாமல் இன்னும் சாகு படிக்கு லாயக்கான தரிசு நிலங்கள், ஆற்றிேirரப்படுகைகள், மரங்கள் வளர்ப்புக்கு லாயக்கான இடங்கள் 3 / 47 D f), நமது நாட்டில் இன்னும் மிச்சமிருக்கிறது. அவை யெல் லாம் சரியான முறையில் நிலமில்லா விவசாயிகளுக்கும்