பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 6 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

உள்ள ஒரளவு பணம் படைத்தவர்கள் அரசாங்க உத்தி யோகங்களில் உள்ளவர்கள், வேறுபல வேலைகளில் உள்ள வர்கள் தங்கள் சேமிப்புகளை வைத்து நிலம் வாங்கி வைத்தி ருக்கும் நிலவுடமையாளர்கள், சிறு தொழில் வியாபாரம் முதலியவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் சேமிப்புகள் லாபத்தை வைத்து நிலத்தை வாங்கி வைத்திருக்கும் நில வுடமையாளர்கள் பலரும் இருக்கிறார்கள் இத்தகைய நில வுடமையாளர்களின் எண்ணிக்கை அண்மைக் காலத்தில் அதிகமாகியிருக்கிறது. ஒருபக்கம் நிலத்தில் நேரடியாக சாகு படி செய்யாமல் வாரக் குத்தகைக்கு நிலத்தை விட்டுக் கொண்டிருந்தவர்கள், பல்வேறு நிலச் சட்டங்கள் வந்துள்ள தால், நிலத்தை வைத்துக் கொண்டிருக்க விரும்பாமல், அதை விற்று விட்டு நகரங்களுக்கு வேறு தொழில்களுக்கும் உத்தி யோகங்களுக்கும் சென்றதும் உண்டு. மறுபக்கம் பல்வேறு தொழில்களை, செய்து கொண்டும் உத்தியோகங்களில் வேலை செய்து கொண்டும் இருந்தவர்கள், இன்னும் சிலர் பஞ்சாலை முதலிய ஆலைகளில் வேலை செய்து கொண்டி ருந்தவர்கள் கூட வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின்னர், தங்கள் சேமிப்புகளைக் கொண்டு நிலம் வாங்கி நவீனமுறை யில் கூலி ஆள் போட்டு விவசாயம் செய்வதும் சிறிதளவில் வளர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் சிறு விவசாயிகள் தங்களுடைய நிலத்தை விவசாயம் கட்டுபடியாகாமல் விற்று விட்டு, விவசாயத் தொழிலாளர்களாக மாறியுள்ளார்கள், மேலும் மாறி வருகிறார்கள்.

இவர்கள் சில்லரை நிலவுடமையாளர்களாக இருந்தாலும் பெரும்பாலும் நடுத்தர விவசாயிகளின் தரத்தில் சொல்ல லாம். ஆனால் இவர்களுக்கு வேறுவகை வருமானங்களும் இருப்பதால் விவசாயத்தால் ஏற்படும் நஷ்டம் அவர்களை பெரிய அளவில் பாதிப்பதில்லை. கடன் இல்லாமல் சொந்தப் பண வசதிகளைக் கொண்டு, கூவி உழைப்பைக் கொண்டு விவசாயத்தை நடத்துவதால் இவர்களுக்கு விவசாயம் சிறி தளவிலாவது துணையான லாபகரமான தொழிலாகவே உள்ளது. இவர்களுக்கு வேறு பல பொருளாதார பிணைப்பு களும் இருப்பதால் விவசாயிகளுடைய இயக்கத்தில் முனைப் பாக வரமாட்டார்கள். அதே சமயத்தில் பொதுவான விவ சாயிகளின் நலன்களுக்கு விரோதமாகவும் போக மாட்டார் கள். நடுநிலையாக இருந்து கொள்ளும் வாய்ப்பு இவர் களுக்கு அதிகம்.

ஜனநாயகப்புரட்சியில் செயலூக்கத்துடன் பங்குகொள்ளும் வர்க்கங்கள் மட்டுமல்லாது, நடுநிலை வகிக்கும் வர்க்கப் பகுதிகளும் கூட முக்கியமானதாகும். நடுநிலைப்பகுதிகளின் பொது ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிப்பதும் மிகவும் அவசியமானதாகும்.