பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 16 1

பொதுத் தேர்தல்கள் முடிந்து புதிய சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் அமைச்சரவைகளும் ஆட்சி அமைப்புக் களும் ஏற்பட்டன. புதிய ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப் பட்டன. புதிய பல அணைகள் கட்டப்பட்டன. கிராமங் களுக்கு மின்சாரம வந்தது. புதிய பாசன வசதிகள் ஏற்பட் டன. பசுமைப்புரட்சி என்னும் பெயரில் விவசாயத்தில் நவீன முறைகள் வந்தன. விவசாயிகளிடத்தில் ஒரு அமைதி 1 ) படடது.

1945-50 ம் ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய விவ சாயிகள் போராட்டங்களை வீரமுடன் நடத்திய அகில இந்திய கிசான் சபா போன்ற சுயேச்சையான விவசாயி களின் அமைப்பு நிலைகளும் சற்று அமைதியடைந்தன.

இந்த அமைதியும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. மூன்று ஐந்தாண்டுத்திட்டங்கள் முடிந்து நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கும் போது , 1967-ம் ஆண்டி ற்குப் பின்னர் முதலாளித்வ நெருக்கடியும் சரிவும் தொடங்கியது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும். அதனால் ஏற் பட்ட மனித நாட்கள் நஷ்டமும் அதிகரித்தன. நாட்டில் அரசியல் நெருக்கடியும் தொடங்கியது. மத்திய ஆட்சியிலும் மாநிலங்களின் ஆட்சியிலும் ஏகபோகமாக இருந்த, இந்திய முதலாளிகளின் பிரதான அரசியல் கட்சியான இந்திய தேசீய காங்கிரஸ் கட்சி, முதல் தடவையாக 1967-ம் ஆண்டு தேர்தலில் ஒன்பது மாநிலங்களில் தோல்வியடைந்தது. 1969-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியும் இரண்டாகவும், பல வாறாகவும உடைந்தது.

இந்திய விவசாயிகளிடம் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கும் பிடிப்பும் குறையத் தொடங்கியது.தமிழ் நாட்டில் 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி தோற்றது. அதன்பின்னர் அது மீண்டும் எழுந்திருக்கவே யில்லை.

தமிழகத்தில் புதிய விவசாயிகள் எழுச்சி ஏற்பட்டது. இந்திய விவசாயிகளின் புதிய எழுச்சியின் முன்னோடியாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடங்கியது.

நடுத்தர மற்றும் வசதியான விவசாயிகளின் தலைமையில் புதிய சுயேச்சையான விவசாயிகள் சங்கங்களும் தோன்றின. அகில இந்திய கிசான் சபாவின் தமிழ் நாட்டுக் கிளையான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரண்டாக உடைந்து இரு சங்கங்களாக இரு கம்யூனிஸ்ட்கட்சிகளின் தலைமையில் செயல்பட்டன. விவசாயிகளின் புதிய போராட்டத்தில் பல இடங்களில் தமிழ்நாடு கிசான் சபாவும் கலந்துகொண்டது.

1970 ஆம் ஆண்டுகளில்

1970-ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில், விவசாயிகளின்