பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 2 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

நிலைமையில் புதிய நெருக்கடிகள் ஏற்பட்டன. அந்த நெருக்கடியின் சுமைகளைத் தாங்க முடியாமல் தமிழக விவசாயிகளிடம் ஒரு புதிய வெடிப்பு தானாகவே எழுந்தது.

தமிழ் நாட்டின் நீர்ப்பாசன முறையில் மூன்று பிரிவுகள். ஒன்று கால்வாய்ப் பாசனம், இரண்டு கண்மாய்ப்பாசனம்,

மூன்று கிணற்றுப் பாசனம் , என்பதை ஏற்கனவே அறிவோம்.

ஏரிப்பாசனத்திலும் பல ஏரிகள், கண்மா ப்கள் துார்ந்து போய் சரியாகப் பராமரிக்கப்படாததாலும் தண்ணிர்ப் I_IT EF T பற்றாக்குறையினாலும், ஏரிகண்மாய்ப்பாசன

நிலங்களிலும் கிணறுகள் தோண்டப்பட்டு, பாசனத்திற்குப் பயன் படுத்தப் பட்டது.

கிராமப் புறங்களுக்கு மின்சார வினியோகம் விஸ்தரிக்கப் பட்டு, கின்றுகளில் மின்சார பம்பு செட்டுகள் போடப் பட்டன. புதிய பல கிணறுகளும் வெட்டப்பட்டன. மின் சார பம்புசெட்டுகளும், ஆயில் என்ஜின்களும் பழக்கத் திற்கு வந்தன என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த ட ம்பு செட்டுகள் மூலம் பாசன வசதி செய்யப்

ப்ட்டது, விவசாயிகளின் சொந்த முயற்சியின் மூலமாகும்.

மின்சார பம்புசெட்டுகளுக்கான மின்கட்டணம், மினிமம்’ கட்டணம், மற்றும் அதன் தொடர்பான பல பிரச்னைகள் விவசாயிகளுக்குப் பளுவாக இருந்தது. கால்வாய்ப் பாசனத் திற்குக் கட்டணம் அதிகம் இல்லை. கண்மாய்ப் பசனத் திற்கு அதிகம் கட்டனம் இல்லை. வெறும் கூடுதல் நிலவரி மட்டும்தான். அல்லது தண்ணிர்வரி மட்டும்தான்.

ஆனால் கிணற்றுப் பாசனத்திற்கு கிணறு வெட்ட், பம்1 செட் போட, மின் இணைப்பு வாங்க, மின் கட்டணம் கட்ட, தனி முதலீட்டு அவசியம் ஏற்பட்டது. அதற்கான பனம் , அதற்கான வட்டி, மின்கட்டனைச் செலவுகள் முதலியவை விவசாயிகளுக்கு அதிகப் படியான செலவுகளாயின.

இந்தச் செலவுகளைத் தாங்கமுடியாமல் விவசாயிகளுக்கு மின் கட்டனத்தைக் குறைக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி தொடங்கியது. இந்தக் கிளர்ச்சியின் தொடக்கத்தில் இதை பணக்கார விவசாயிகளின் போராட்டம் என்றும், ஏர் ஒட் டும் விவசாயிகளின் போராட்டமல்ல, கார் ஒட்டும் விவசாயி களின் போராட்டம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்தப் போராட்டம், விவசாய்த்தில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த நெருக் கடியின் வெளிப்பாடாகவே இருந்தது. o

கிணற்றுப் பாசனத்திற்கான மின்சாரப் பம்புசெட்டுகளுக் காக மின் கட்டணத்தை மாநில அரசு உயர்த்தியது. இந்த