பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.4 G கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

பம்பு செட்டுகளுக்கான கடன் இந்த விவசாயிகளைக் கடுமை யாக அழுத்திக் கொண்டிருந்தது.

விவசாயிகளின் விளைபொருளுக்கு முதலாளித்வ மார்க்கட் மூலமே விலை ஏற்படுகிறது. அரசு மூலம் சில சமயம் விலை நிர்ணயம் செய்யும்போது குறைவாகவே நிர்ணயம் செய்யப் படுகிறது. இதில் முதலாளித்துவ மார்க்கட் கொள்ளை விவசாயிகளை அழுத்தியுள்ளது. ==

இந்த நெருக்கடியின் காரணமாக, விவசாயிகளுக்கு தாங்க முடியாத சுமை ஏற்படுகிறது. அதன் முதல் வெடிப் 1- அதி தமிழகத்தில் பம்பு செட் விவசாயிகளிடத்தில்

போராட்டம் வெடித்தது.

அரசின் கொள்கை:

அரசிடம் விவசாயத் தொழில் சம்பந்தமாக ஒரு திட்ட வட்டமான விவசாயிகளுக்கு சாதகமான கொள்கை

இல்லை.

நிலப்பிரபுத்துவ பிச்ச சொச்சங்கள் இன்னும் நீக்கப்பட வில்லை. சாகுபடியாளர்களுக்கு முழுமையான பாதுகாப் பிற்கு உத்தரவாத மில்லை.

விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப் பதற்கான கொள்கை இல்லை.

விவசாயத்திற்கு மிகவும் அவசியமான நீர்ப்பாசன உத்திர

வாதம் இன்னும் சரியாக ஏற்படவில்லை. ஒரு பக்கம் வெள்ளமும் மறுபக்கம் வறட்சியும் தொடருகிறது. அரசுக்கு ஒரு சரியான நதி நீர்ப்பங்கீட்டுக் கொள்கை இல்லை.

கிணற்றுப் பாசனம் ஒரு தனிப் பிரச்னையாகும். அது தமிழகத்தில் அதிகம். குடிதண்ணிருக்கும், பாசனத்திற்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவது தமிழ் நாட்டில் பருவ நிலைக்கு ஏற்ப, ஏற்பட்ட ஒரு பழக்கமாக இருக்கிறது. அதில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும முறையில் தான் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் உண்டாக்கப்பட் டுள்ளன. இந்த நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் பரா மரிக்கவும் அரசிடம் எந்தக் கொள்கையும் இல்லாததால் அவைகள் எல்லாம் நாச மடைந்து கிடக்கின்றன.

மறுபக்கம் கிணற்றுப் பாசனத்தில் கிணறுகள் வெட்டுவது அதைப்பராமரிப்பது, பம்பு செட்டுகள் போடுவது அவற்றைப் பராமரிப்பது என்பது விவசாயிகளின் தனிப் பொறுப்பி லேயே விழுந்துள்ளன. இதில் அரசின் உதவி எதுவும் இல்லை. கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு வட்டி அதிகம். மின்சாரம் கொடுக்கப்பட்டது. ஆனால்