பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o கிராமப்புறப் பாட்டாவிகளை நோக்கி I G. G.

சாயத் தொழில் பற்றிய அடிப்படைக் கொள்கை வகுக்கப் பட்டது. தமிழகத்தில் 1967-ம் ஆண்டிற்குப் பின்னர் ஏற் பட்ட தி முக,அதிமுக அரசுகளும் அதே அடிப்படைக் கொள் கையைத் தான் பின்பற்றி வந்திருக்கின்றன. -

1967-ம் ஆண்டில் தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கும் திமுகவின் வெற்றிக்கும் விவசாயிகள்தான் பெரும்பாலும் காரணமாக இருந்தார்கள். அதேபோல I 97 7 தேர்தலில் திமுகவின் தோல்விக்கும் அதிமுகவின் வெற்றிக்கும் அந் தவிவசாயிகளே காரணமாக இருந்தார்கள். அதிமுக அரசும் விவசாயிகளின் அடிப்படைப்பிரச்னையைத் திர்க்கவில்லை. விவசாயிகளை ஏம்ர்ற்றிவிட்டது. இப்போது உரிய காலம் வரும் என்று விவச யிகள் காத் துக் கொண்டி

ருக்கிறார்கள் என்று கூ பல ம்.

1970-ம் ஆண்டு களில் விவசாயிகளி ன் போராட்டங்கள் தீவிர மடைந்தன என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

== H # # † # மின் கட்டன உயர்வை எதிர்த்து மாநில்ம் தழுவிய. போராட்டம் எழுந்தது. விவசாயிகளின் மறியல் போராட் டம் நடைபெற்றது. பல்லாயிரக்கனக்கான விவசாயிகள்

கைது செய்யப்பட்டு சிறைகளில் வைக்கப்பட்டார்கள். தமிழ கத்தின் சிறைகள் எல்லாம் நிர்ம்பி வழிந்தன. விவசாயிகள் 1} ‘இடங்களில் பம்பு செட்டுகளுக்கான மின்கட்டனத் தைச் செலுத்த மறுத்தார்கள். அதன் காரணமாக அரசு பம்பு செட்டுகளுக்கான பியூஸ் கட்டைகளைப் பிடுங்க உத்தர விட்டது. பியூஸ்’ கட்டைகளைப் பிடுங்கவிட மாட்டோம் என்று விவசாயிகள் பல இடங்களில் அரசாங்க உத்தரவு களை எதிர்த்தார்கள். =

கடன் பாக்கிகளையும் விவசாயிகளால் கட்டமுடியவில்லை. கடன் பாக்கிகளை வசூலிக்க அரசும் கடுமையான உத்தரவு களைப்போட்டது. விவசாயிகள் கட்டாயக் கடன் வசூல் முறைகளைக் கடுமையாக எதிர்த்தார்கள். -

விவசாயிகளுக்கும் அரசுக்கும் ஒரு பெரிய மோதலே ஏற்பட் .டது என்று கூறலாம்- விவசாயிகளின் பேரணிகள், மறியல் கள், கூட்டுக் கிளர்ச்சிகள் மின்கட்டணம். கடன் கட்ட முடி யாமல் மறுத்தல், மாட்டு வண்டி மீறியல் முதலிய பலவித வெடிப்புகள் தோன்றின .

H = ‘r o _o|| -

கட்சிச் சார்பற்ற சுயேச்சையான விவசாயிகள் சங்கங்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டி வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (அகில இந்திய கிசான் சபையுடன் இணைக்கப்பட்டது) ஆகியவிவசாயிகள் சங்கங்கள் விவகாயி கள் போராட்டத்தின் கிளர்ச்சியில் முன் நின்றன, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து