பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

அ. சீனிவாசன் 0 15

உரமிடுதல்

இயற்கையான நிலவளம் நிரம்ப இருந்த போதிலும், தொடர்ச்சியான சாகுபடி காரணமாக, நிலத்தின் சாரம் குறைகிறது. எனவே நிலத்தின் சாரத்தைப் பாதுகாக்க உரமிடுதலின் அவசியம் உணரப்பட்டு, இந்திய விவசாயத் தில் திட்டமிட்ட முறையில் இயற்கை உரங்கள் இடப் பட்டு வந்திருக்கின்றன. வண்டல் மண் அடித்தல், தழை, உரம், தொழு உரம் ஆகிய உரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய நாட்டின் தட்ப வெப்ப சாதக நிலை கார ன மாகத் தாவரத்தின் தழைகளும் மிருகங்களின் (ஆடு, மாடு, பன்றி. கோழி) சானங்களும் கழிவுகளும் மண்ணில் மக்கி, அவை விளை நிலத்திற்கு மிகவும் சிறந்த உரமா கிறது. இந்த உரங்களை இந்திய விவசாயிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர். அதே போல சாகுபடிப் பொருள்களில் கிடைக்கும் கழிவுப் பொருள் களும், மாடுகளுக்குத் தீவனமாகவும் மற்றவை நிலத்திற்கு உரமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தழை உரத்திற் காக சில வகைத் தாவரங்கள் பயிரிடப்பட்டும் பயன்படுத் தப் பட்டுள்ளன.

கால்நடைகள்

இந்திய விவசாயத்துடன் இணைந்ததாக ஆடு மாடு வளர்த்தல், கோழி பன்றி வளர்த்தல் ஆகியவை அபி விருத்தி செய்யப்பட்டிருக்கின்றன . இவை பெரும்பாலும் கிராமப்புற ஏழைகளின் துணைத் தொழில்களாகவும் வளர்ச்சி ெ 1ற்றுள்ளன. ஆடு, - TG), கோழி, பன்றி, ஆகியவை கிராமப்புற ஏழைகளின் குடும்பப் பொருளா தாரத்தில் முக்கிய அங்கம் பெற்றுள்ளன.

ஆடு, கோழி, பன்றி ஆகியவை, மாமிசத்திற்காக மட்டு மின்றி அவைகளின் கழிவுப் பொருள்கள், சாணம் ஆகியவை நிலத்தி ற்கு மிகவும் அவசியத் தேவையான இயற்கை உயிரணு உரமாகவும் அமைகிறது.

மாடுகள், இந்திய விவசாயத்தின் முக்கிய உற்பத்தி சக்தியாக அமைந்துள்ளன. மாடுகள், உழவுக்கும் இதர விவசாய வேலைகளுக்கும் கிராமப் புறப் போக்குவரத் து சாதனமான வண்டி இழுத்தல் முதலிய வேலைகளுக்கும் பயன்படுகின்றன. பசுக்கள் எருமைகள் பால், தயிர், நெய், மோர் ஆகியவற்றின் உற்பத்திக்கும் அவசியமாய் உள்ளன. மாடுகளின் சாணம் மிக முக்கியமான தொழு உரமாக அமைந்துள்ளது.

இதன் காரணமாக இந்திய நாட்டின் கிராமப்புறங்களில்