பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

இருந்தது அக்கட்சியின் நெருக்கடிக்குமேலும் துTபமிட்டது. திமுக இரண்டாக உடைக் த து. அதன் பின் னர் சமயம் பார்த்து மத்திய ஆட்சியில் இருந் த இ. காங்கிரஸ் ஆட்சி பும் தங்கள் அரசியல் ஆசைகளையும் வைத்து திமுக ஆட்சியை ‘டிஸ் மிஸ்” செய்தது. அன்றைய அரசியல் நெருக்கடியின் சூழ்நிலையில், மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக் கைக்கு மக்களி - ம் குறிப்பாக விவசாயி களிடம் எதிர்ப்பு இல்லாமல் போய்விட்டது. குறிப்பிட்ட விவசாயிகள் பகுதியிடம் மத்திய அரசு தங்களைக் காப்

பாற்றும் என்றும் சில பிரமைகள் இருந் தன. மத்திய அரசின் கொள்கைகள்தான் விவசாயிகளின் நெருக்கடிக்குக் காரனம் என்பது போதுமான அளவில் விவசாயிகளுக்

கிடையில் தெளிவு படாமல் இருந்தது. இருப்பினும் தமிழ கத்தில் ஏற்பட்ட விவசாயிகளின் போராட்டத்தின் அலை இந்தியா முழுவதிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாகக் கடன் நிவாரணம், விவசாயிகளின் விளை பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை முதலிய பிரச்னை களில் விவசாயிகளிடம் பொதுவான அதிருப்தி அலையும் விசிக் கொண்டிருந்தது. இதுவும் சேர்ந்துதான் 1977-ம் ஆண்டில் மத்திய ஆட்சியில் இ. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது எனக் கூறலாம்.

கொடுமையான பொருளாதார நெருக்கடிக்கும். அரசின் அடக்குமுறைக்கும் ஆளான விவசாயிகள் தமிழகத்தின் ஆளும் கட்சியின் மீதும் எதிர்ப்பு கொண்டிருந்தார்கள். அதேசமயத்தில் அதிமுக தலைமை விவசாயிகளின் பி ச்னை களைத் தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்தது. விவசாயி களுக்கு ஏற்பட்டிருந்த அதிருப்தி, அதிமுகவின் வாக்குறுதிகள் ஆகியவை அதிமுகவின் தேர்தல் வெற்றிக்கு 1977-ம் ஆண் டில் உதவின. ஆயினும் வெற்றி பெற்ற பின்னர் அதிமுக ஆட்சித் தலைமை வாக்குறுதியை சரியாக நிறைவேற்ற வில்லை. உயர் மட்டக் குழு அமைத்து.சில சலுகைகளை அறி வித்தது. அத்துடன் விவசாயிகளை சிறிய விவசாயிகள் பெரிய விவசாயிகள் எனவும் பிரிவினை செய்ய முயன்றது.

திமுகவிலிருந்து உடைந்து பிரியும் போதும், அதிமுக எனத் தனிக்கட்சி தொடங்கியபோதும், மற்றும் விவசாயிகள் தொழிலாளர்கள் போராட்டங்களின் போதும்: அதிமுக கட்சித் தலைமை எடுத்த நிலை வேறு. அது மக்களுக்கு ஆசையூட்டும் வாக்குறுதிகளாக இருந்தன. ஆனால் அவர் கள் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபோது அந்தத் தலைமை தனது முதலாளித்துவ ஆதரவான வர்க்க குணத்தைக்காட்டி விடுகிறது.

1972 ஆம் ஆண்டில் விவசாயிகளின் போராட்டம் உச் சத்திற்குச் சென்று திமுக ஆட்சித்தலைமை இரும்புக்கரம் என்று பேசிய போது அன்று திமுகவில் முக்கிய பொறுப்பில்