பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ) கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

விவசாயிகளின் பிரச்னைகளை வெறும் சங்க மட்டத்தில் மட்டுமல்லாமல் அரசியல் மட்டத்திற்கும் உயர்த்த வேண் டும் என்னும் உணர்வும் விவசாயிகளிடம் வளர்ந்து வருகிறது.

தமிழகத்தில் தொடங்கிய விவசாயிகளின் வெடிப்பு இதர மாநிலங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் பரவியது. கேரளத்தில் மிளகு, தேங்காய் போன்றவைகளுக்கு நியாய விலை வேண்டும் என்று கிளர்ச்சி கிளம்பியது. ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் பெரிய அளவில் விவசாயிகளின் பேரணிகள் நடைபெற்றன. மகாராஷ்டிரத்தில் விவசாயி களின் போராட்டம் உச்சத்திற்குச் சென்றது. குஜராத், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களிலும் விவசாயிகளின் எழுச்சிப்பேரணிகள் நடைபெற்றன.

எல்லா விவசாயிகள் சங்கங்களின் சார்பில் அனைத்து சங்க அனைத்துக்கட்சி விவசாயிகள் பேரணிகள், டில்லியில் மத்திய ஆட்சியின் கவனத்திற்குக் கொண்டு வரும் முறை யில் நடத்தப்பட்டது.

அரசியல் கட்சிகளும் விவசாயிகளின் முக்கிய பிரச்னைகளை தங்களுடைய கொள்கைப் பிரச்சாரத்தில் எடுத்துக்கொண் டுள்ளன .

குறிப்பாக இடதுசாரி ஜனநாயக எதிர்க்கட்சிகளின் கூட்டங் களில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்னைகள் பலவும் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

விவசாயிகளின் பிரச்னைகளை வெறும் பொருளாதார கோரிக்கைப் பிரச்னைகளாக மட்டுமல்லாமல், சமுதாயப் பிரச்னைகளாக ஜனநாயகப் பிரச்னைகளாக எடுத்து அவை களை அரசியல் மட்டத்திற்கும் உயர்த்துவதற்கான கடமை களையும் வகுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில்முதலாளித்துவ அமைப்புமுறையும் முதலாளித் துவக் கட்சிகளின் ஆட்சி முறையும் நீடிக்கும் வரையிலும் இந்திய் விவசாயிகளின் அடிப்படையான பிரச்னைகள் அவர் களின் அடிப்படையான அரசியல் பொருளாதார சமுதாயப் பிரச்னைகள், அவர்களுடைய கல்விகலாச்சாரப் பிரச்னை கள் தீராது.

இதில் எந்தக்கட்சிகள், எந்தத் தலைவர்கள் ஆட்சிப்பொறுப் பில் இருந்தார்கள் என்பதைக் காட்டிலும் எந்தப் பாதை யில் நாம் சென்றிருக்கிறோம், என்ன கொள்கைகளைக் கடைப்பிடித்திருக்கிறோம் என்பது முக்கியமானதாகும்.