பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 173

நமது நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பலரும் தனிப் பட்ட வாழ்க்கை முறையில் மனிதாபிமான முறையில் இருந்து வந்திருக்கிறார்கள். எனினும் அவர்களுடைய ஆட்சி யின், அந்தக்கட்சிகளின் கொள்கைகளும் நடை முறையும் முதலாளித்துவ வர்க்கத்தன்மை கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. விவசாயப் பொருளாதாரம் நாட்டின் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. அது நீடிக் கும் வரை விவசாயிகளின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக் கப்படுவது சாத்தியமில்லை என்பதையும் நாடுவிடுதலை அடைந்த நாற்பதாண்டுக்கால அனுபவம் நமக்கு தெளிவா கவே எடுத்துக் காட்டியுள்ளது.

எனவே இந்த அனுபவங்களையும் கணக்கில் எடுத்து நமது எதிர்காலக் கடமைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.விவ சாயிகளின் கிராமப்புறப் பாட்டாளிகளின் கோரிக்கைகளுக் கான போராட்டங்களையும். முதலாளித்துவப் பாதையை மாற்றி இந்திய வழியில் சோஷலிஸத்தை அமைப்பதற்கான போராட்டத்தையும் இணைப்பதையும் நமது கடமையாக வகுத்துக்கொள்ள வேண்டும்.

“#r