பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 6 O கிராமப்புறப் பாட்டாளிகளை தோக்கி

அந்த சங்கங்கள் பலமாக இருக்கின்றன என்று பொரு ளாகும். கிராம சங்கங்கள் பெயரளவில் உள்ள சங்க அமைப்பாக இருக்கக் கூடாது.

முதலாவதாக கிராம சங்கங்களின் உறுப்பினர்கள் அதிக | Tது சேர்க்கப்பட வேண்டும். ஆண்டு தோறும் ஒரு மாதத்தில் சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பதை ஒரு இயக்கமாக நடத்த வேண்டும். இரண்டாவதாக உறுப் பினர் சேர்த்தல் முடித்த பின்னர் ஆண்டு தோறும் அந்த உறுப்பினர்களின் ஆண்டுப் பேரவைக் கூட்டங்களை நட்த்த வேண்டும். அந்த ஆண்டுப் பேரவைகளை சற்று விரிவாகவும் விளம்பரமாகவும், எல்லா உறுப்பினர்களுக் கும் பொது மக்களுக்கும் செய்தி செல்லுமளவிற்கு நல்ல முறையில் நடத்த வேண்டும்.

ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் ஆண்டறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆண்டறிக்கை சங்க நிர்வாகக் குழு வால் தயாரிக்கப்பட வேண்டும். சாத்தியப் பட்டால் அந்த ஆண்டறிக்கை வரவு-செலவு, தீர்மானங்கள் ஆகியவற்றை அச்சிட்டுக் கொடுத்தல் நல்லது. அந்த ஆண்டறிக்கைகள் சங்கத்தின் வரலாறாகும். அந்தந்த கிராம மக்களின் வரலாற்றில் ஒரு பகுதியாகும்.

நமது நாட்டில் சிறு தெய்வங்களும் சிறு கோவில்களும்

லட்சக்கணக்கில் உன் ளன. பெரிய கோவில்கள் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கில் உள்ளன. இவைகளில் திரு விழாக்கள், பொங்கல் விழாக்கள் நடைபெறுகின்றன.

அவைகளில் மக்கள் திரளாக்க கூடுகிறார்கள். அதேபோல் நமது சங்கங்களின் ஆண்டுப் பேரவைக் கூட்டங்களை சிறு விழாக்களைப்போல் கிராம விழாக்களைப்போல், நடத்த வேண்டும்.

இந்த ஆண்டுப் பேரவைகளின் நிகழ்ச்சி நிரல்கள் முன் கூட்டித் தயாரித்து அறிவிக்க வேண்டும். ஊரில், அந்தந்தப் பாட்டாளி மக்கள் பகுதியில், செல்வாக்கும் பொது சேவை உணர்வும் உள்ள ஒருவரை சங்கத்தலைவராகக் கொண்டு வர வேண்டும்.

நிகழ்ச்சி நிரலில், தலைவர் உரை, ஆண்டறிக்கை, வரவுசெலவுக்கணக்கு, புதிய நிர்வாகிகள் தேர்வு, தீர்மானங்கள் முதலியவை இடம் பெறவேண்டும்.பகுதி மக்கள், கிராம மக் களின் பிரச்னைகள் கோரிக்கைளை தீர்மானங்களாகக் கொண்டுவர வேண்டும். ஆண்டறிக் க விவாதங்களிலும் தீர்மானங்களை உருவாக்குவதிலும் சங்க உறுப்பினர்கள் தங்கள் பங்கை அதிகமாகச் செலுத்த முயல வேண்டும். ஒவ்வொரு சங்கத்திலும் சங்க உறுப்பினர் பட்டியல், நிகழ்ச்சிக் குறிப்பேடுகள், வரவு செலவுக் கணக்குகள்,