பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 177

தீர்மானங்கள் கோப்புகள் முதலியவை கட்டாயம் இருக்க வேண்டும். அவைகளை முறையாகக் கொண்டு வர வேண்டும்.

சங்கப் பேரவைக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகக்குழு மாதந்தோறும் கூடி சங்கப் பணிகளைத் தொடர வேண்டும்.

இத்தகைய நடை முறை விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், இதர கிராமப்புறப் பட்டாளிகள்

சங்கங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

இந்த” சங்கங்களை உண்மையான வெகு ஜன அமைப்பு களாக உருவாக்குவதும், அவைகளை ஜனநாயக முறையில் செயல்படுத்துவதும், நமது அடிப்படையான கடமை யாகும். வெகுஜனங்களுடைய அமைப்புகளிலும் அதன் இயக்கங்களிலும் அந்த வெகுஜனப்பகுதிகளை ஈடுபடுத்து வது எனபது அவா.களுடைய வாகக உணாவையும் ஜன நாயக உணர்வையும் உயர்த்துவதற்கு மிகவும் அவசிய மானதாகும.

அடிப்படை கிராம சங்கங்களை உருவாக்குவது மிகவும் கடினமான வேலை. தொழிற்சாலைகளில் தொழிலாளர் களின் அடிப்படை சங்கங்கள் ஒரளவு உருவாகியுள்ளன. அத்தகைய தொழிலாளர் சங்கங்களை உருவாக்குவதற்கு, வழிகாட்டி ஒழுங்கு படுத்துவதற்கு தொழிற்சங்கச் சட்டம் இருக்கிறது. ஒவ்வொரு சங்கமும் செயல்படுவதற்கான மாதிரி விதிகள் இருக்கின்றன. அம் மாதிரி விதிகளின் அடிப் படையில் ஒவ்வொரு சங்கமும் தங்கள் சங்கத்திற்கான செயல்பாட்டு அமைப்பு விதிகளை அமைத்துக்கொண்டு அந்த அமைப்பு விதிகளை வழிகாட்டியாகக் கொண்டு செயல்படுகின்றன. இந்த அமைப்பு விதிகள், சங்கத்தின் அமைப்புப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, சங்கமும், அமைப்பு விதிகளும் தொழிற்சங்க சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த அமைப்பு விதிகளில், சங்கத்தின் நோக்கங்கள், நிர்வா கம், நிர்வாகிகள் தேர்தல், அவர்களின் செயல்முறை, நிதி வரவு செலவுக்கணக்கு , ஆண்டுப் பேரவைக்கூட்டம், பொது நிதிவரவு முறையும் செலவு செய்யும் முறையும் இவ்வாறு விதிகள் அமைக்கப்பட்டு, அந்த விதிகள் தொழிற்சங்கங் களின் செயல்பாட்டிற்கு வழிகாட்டுகின்றன.

இத்தகைய தொழிற்சங்கமாதிரி அமைப்பு விதிகளை வழி காட்டி rகக் கொண்டும் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் அகில இந்திய அமைப்புகளின் வழிகாட்டுதல்களைக் கொண்டும் கிராம சங்க அமைப்பு களை அமைத்துக்கொள்ளலாம்.