பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் () 17 9

ஒரு கிராமத்தில் வர்க்க ஒன்றுமையின் அடிப்படையில் வர்க்க அமைப்புக்களை வலுவாகக் கட்டுவதில் நாம் வெற்றி பெற்றுவிட்டால், அங்கு சாதி வேறுபாடுகள், பாகுபாடுகள் , கொடுமைகளை நீக்கி விடமுடிகிறது.

எனவே கிராமப்புறங்களில் விவசாயிகள் சங்கங்களையும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையும் இதர கிராமப்புற பாட்டாளிகளின் சங்க அமைப்புகளையும் உருவாக்குவது என்பது, அந்த மக்கள் பகுதியினரின் கோரிக்கைகளுக்காகப் போராடுவது மட்டுமல்ல, வர்க்க அமைப்புகளின் வளர்ச்சி, கிராமப்புறப் பாட்டாளிகளை கல்வி கலாச்சாரப்பின்தங் கிய நிலையிலிருந்தும், சாதி மத மூடப்பழக்க வழக்கங்களி லிருந்தும் விடுவிக்கப்படுவதற்கும். கிராமப்புற மக்களுக் கிடையில், அவர்களுடைய வாழ்க்கையில் ஜனநாயக மறு மலர்ச்சி ஏற்படுவதற்கும் உதவுகிறது, ஊக்கமூட்டுகிறது.

இந்தப் பேரவைக் கூட்டங்கள், சம்பந்தப்பட்ட கிராமப் புறப் பாட்டாளி மக்களின் பொருளாதார கோரிக்கை இதர கோரிக்கைகளைப் பற்றி எடுத்துக் கூறி தீர்மானங்கள் நிறை வேற்றக் கூடியதாக மட்டுமல்லாமல், சாதி மத இன மொழி வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றுகூடிக் கலந்து பேசி, தங்கள் வாழ்க்கையின் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்கும் பேரவைக் கூட்டங்களாக அவைகளை வளர்க்க வேண்டும்.

கிராமப்புறப் பாட்டாளி மக்களின் சங்கங்களின் ஆண்டுப் பேரவைக் கூட்டங்கள், தொழில், வேலை, கிராம வளர்ச்சி வாழ்க்கை நலன்களின் அடிப்படையில் சாதி மத மொழி இன வேறுபாடுகளின்றி ஒன்றுபட்டு நிற்கும் வர்க்கங்களின் கூட்டாக, பொருளாதார அரசியல் கோரிக்கைகளை முழங்கு வதுடன், கலை விழாக்களும், விளையாட்டுப் போட்டிகளும், சிறுவர் சிறுமியர், மாதர்கள், இளைஞர்கள் பங்கு கொள் ளும் பல்வேறு நிகழ்ச்சிகளையும் இணைத்து அதை ஒரு மக் கள் விழர் க் கூட்டமாக வளர்க்க வேண்டும். இதன் மூலம் அனைத்து உழைக்கும் மக்களின் ஒற்றுமையின் சின்னங் களாக சங்கங்கள் வளரும்.

2. கோரிக்கைகள் தொகுப்பது பற்றி

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இதர கிராமப் புறப் பாட்டாளிகளின் தொழில், வேலை மற்றும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கான .ே கா ரி க் ைக ச ைஎ க் தொகுத்து, அவர்களுடைய சங்கங்களின் மூலம் அவர்களு டைய கோரிக்கைகளுக்கான இயக்கத்தை தொடர்ச்சியாக நடத்துவது என்பது வெகுஜன இயக்கத்தின் அடிப்ப ை யாகும். இதில் பகுதி வாரியான கோரிக்கைகளும் உள்ளன. பொது கோரிக்கைகளும் உள்ளன. இவைகளை இணைக்க வேண்டும்.