பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

தாகும். பருவ நிலை காரணமாக ஏற்படும் கஷ்டங்களை சமாளித்து நமது நீர்ப்பாசன வசதிகளைப் பாது காக்க வேண்டும். புதிய வசதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். வளர்க்க வேண்டும்.

மு தலாவதாக நீர்ப்பாசனத்திற்கான நீண்ட காலத் திட்டங் களி ல் நமது நாட்டில் நதிநீர் இணைப்பிற்கான திட்டங்களைத் தொடர்ந்து வற்புறுத்த விேண்டியது அவசிய மாகும். சூாட்டிலுள்ள அனைத்து நதிகளையும் இணைப்ப தற்கு இமயம் முதல் குமரி வரையிலுமான நதிநீர் இணைப்பிற்கு திட்டமிட்டு, அதை கட்டம் கட்டமாக நிறை வேற்றலாம்.

நமது நதிகளை இணைத்து விட்டால், நமது பாசன வசதி யைப் பெருக்கி, - உணவு உற்பத்தியைப் பன் மடங்கு அதிகரித்து, இந்தியாவைப்போல் பத்து இந்தியாவிற்கு சோறு போடலாம். நதிநீர் இணைப்பு மூலம் நீர் மின் நிலையங்களை பெரும் அளவில் கொண்டு வர, வாய்ப்பு ஏற்படும். அதன் மூலம் ஏராளமான அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து. இந்தியாவைப் போல் பத்து இந்தியா விற்கு மின்சாரம் வினியோகம் செய்யலாம் என்று நிபுணர்

கள், பொறி இயல் வல்லுநர்கள் கூறுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்தக் கோரிக்கை பற்றி தொடர்ந்து மக்களுடைய உணர்வு நிலையை

உயர்த்த வேண்டும்.

இந்தியா முழுவதற்குமான மொத்தமான நதிநீர் இணைப்

புத் திட்டத் தின் முதல் கட்டமாக தென் மாநிலங்களின் நதி களை இணைக்க உடனடி முயற்சிகளைச் செய்யலாம். குறிப்பாக மகாநதி, கோதாவரி நதிகளை தெற்கில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணியுடன் இணைக்க முயற்சிகள் ஆேற்கொள்ளலாம். பின்னர். படிப்பீடியாக இமய்த்தின் நதிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

இன்று இந்திய நாட்டில் பல கோடிக்கணக்கான பேருக்கு, போதுமான வேலை இல்லை. அதனால் இந்த உழைப்பு சக்தியெல்லாம் வீணாகிறது. இந்த உழைப்பு சக்தியைப் பயன்படுத்தி, நமது நாட்டின் சொந்தத் தொழில் நுட்பத் திறனையே பயன்படுத்தி இந்த மகத்தான திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

தமது நாட்டின் தண்ணிர் சக்தி மிகவும் வலுவானது. காவிரியைச் சோழ மன்னர்கள் குடகு வரை சென்று தவ மிருந்து அம்மலைக் கடவுள் களிடமிருந்து சோழ நாட்டிற்குக் கொண்டு வந்ததாக, பகீரதன் என்னும் சூரிய குல மன்னன் இமயத்திற்குச் சென்று கடும் தவமிருந்து கங்கையை பாரத பூமிக்குக் கொண்டு வந்ததாக, கங்கையின் பிரவாக