பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

வும் கோரிக்கைகளை முன் வைத்து இயக்கம் நடத்து வேண்டும். இந்த இயக்கங்களில் அதிக பட்சமான அளவில் மக்களைத் திரட்ட வேண்டும்.

மூன்றாவதாக கிணற்றுப் பாசனம் தமிழகம் போன்ற மாநிலங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இதில் பெரும் பாலும் மின்சார பம்பு செட்டுகள், ஆயில் என்ஜின்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பாசனத்திற்கு மட்டு மல்லா மல், குடிதண்ணிருக்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்து வது இந்தியாவில் பண்டையப் பழக்கங்களில் ஒன்றாகும்.

இன்றைக்கு இந்தக் கிணற்றுப் பாசன முறைக்கு புதிய பெரிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது. கிணறுகள் மூலம் குடி தண்ணிர் எடுக்கும் முறைக்கும் அபாயம் ஏற்பட்டிருக் கிறது. குறிப்பாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்த கொண் டே இருக்கிறது. பல இடங்களில் நீர் ஊற்று. இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

நீர் ஊற்றுகளைப் பாதுகாப்பது ஒரு முக்கியமான கோரிக் கையாகிவிட்டது. அதற்கு மேல் மட்டத்தில் உள்ள நீர் நிலைகளைப் பாதுகாக்கவேண்டும். நமதுகுளங்கள், ஊருணி கள், தடாகங்கள் முதலியவைகளைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகளை முன் வைத்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

பாசனக் திணறுகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதில் அரசின் வியாபாரப் போக்கு லாபநோக்கம் நீக்கப்பட வேண்டும். பம்பு செட்டு பாசன நிலங்களுக்கு மின் கட்டணத்தை நீக்கிவிடவேண்டும்.

கால்வாய்ப்பாசனத்தில், ஏரி குளம் கண்மாய்ப்பாசனத் தில் அரசு எவ்வாறு நிலவரி மட்டும் வாங்குகிறதோ அதே போல், அரசின் மக்கள் நலத்திட்டங்கள்ன் பகுதியாக மின் இணைப்பு வசதிகளும் இருக்க வேண்டும்.

மேலும் மின் இணைப்பு, மின்சப்ளை, பராமரிப்பு ஆகிய வைகளில் பல கொடுமைகள் நீடிக்கின்றன. அந்தக் கொடுமைகளை நீக்கவும், மின் இணைப்பு வசதிகளை அபி விருத்தி செய்யவும். விவசாயிகள் சங்கங்கள் கோரிக் கைகளை முன் வைத்து விவசாயிகளைத் திரட்டவேண்டும்.

T எல்லாவற்றிற்கும் மேலாக கிணறுகளின் நீர் ஊற்றுகளை, அஆவது நிலத்தடி நீர் ஊற்றுகளைப் பாதுகாப்ப்து ஒரு முக்கியமான மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. அதற்கான தீவிரமுயற்சிகள் உடனடியாக எடுக்கவேண்டும். அதற்கு கசிவு நீர்க்குட்டைகள் என்னும் பெயரில் அரசு சில