பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

கும் ஏழை, நடுத்தர விவசாயிகள் சேலம், தருமபுரி, வடஆற் காடு, போன்ற மாவட்டங்களிலும், நாட்டின் இதர பல வேறு பகுதிகளிலும் விவசாயிகள் கடுமையானபோராட்டங் களை நடத்தியிருக்கிறார்கள்.

நாடு விடுதலை பெற்றபின்னர்,விவசாயிகளின் கடன்வசதிக் அதி தி கூட்டுறவுத்துறை வளர்க்கப்பட்டது. கூட்டுறவு நாணய சங்கங்கள். வங்கிகள் மூலம் விவசாயிகளுக்குக் கடன் கிடைத்தது. ஆனால் இந்தக் கூட்டுறவு அமைப்புகளிலும் வட்டிவிகிதம் படிப்படியாக உயர்த்தப்பட்டது. கடன் வாங் கும் விவசாயிகளிடம் பல் வேறு பிடித்தங்களும் செய்யப் பட்டு: விவசாயிகளின் பணத்தைக் கொண்டே விவசாயி களுக்கு அதிக வட்டிக்குக்கடன் கொடுக்கும் மறைமுகக் கொள்ளையும் இந்திய அரசின் பொதுக் கொள்கை மூலம் கொண்டுவரப்பட்டது.

இப்போது விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பு, உற் பத்திச் செலவு அதிகரிப்பு, விளை பொருளுக்குக் கட்டுபடி யாகும் விலையில்லாத காரணம் ஆகியவைகளால் விவசாயி கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் கட னும்வட்டியும் கூடுதல் வட்டியும், அபராத வட்டியும் அதி கரித்துக்கொண்டே போய், இப்போது அது விவசாயிகளுக் குத் தாங்கமுடியாத பளுவாக வளர்ந்து விட்டது.

எல்லா விவசாயிகளின் எல்லாக் கடன்களையும் ரத்துசெய்ய வேண்டும். சுலபமான முறைகளில் மிகக் குறைவான வட்டி யில் விவசாயிகளுக்குப் புதிய கடன்கள் கிடைக்கவேண்டும் என்னும் கோரிக்கை வலுவாக வரத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பிரச்சனை மீது பல போராட்டங்களும் நடந்துள்ளது அரசும் பல அரைகுறை நடவடிக்கைஎடுத்துள்ளது.ஆயினும் பிரச்னைகள் தீரவில்லை .

கடன்களை ரத்து செய்யவேண்டும் என்னும் கோரிக்கை கூட்டுறவு இயக்கத்திற்கு. இப்போதுள்ள கூட்டுறவு அமைப்பு களுக்கு எதிரானது என்னும் பிரச்சாரமும் கிளப்பிவிடப்பட் டுள்ளது. இந்தப் பிரச்சாரம் பொய்யானதாகும், மோசடித் தனமானதாகும். விவசாயிகளுக்கு விரோதமானதாகும். விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படவேண்டும் என்று கோரும்போது, விவசாயிகளின் கடன் பளுவின் சுமையை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

அத்துடன் இன்றைய கூட்டுறவு அமைப்பில் ஏராளமான ஊழல்கள், நிர்வாகச் சீர் கேடுகள், தேவையற்ற சுமைகள் இருக்கின்றன. கூட்டுறவு அமைப்புகளின் சீர் கேடுகளைப் பற்றி பல விசாரணைகளில் தெரிய வந்துள்ளன. இதில் இடைத்தரகு சிக்கல்களும் சுமையை அதிகரித்துள்ளது.