பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ) கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

5. விவசாய விளைபொருள்களை ஆதாரப்பட்ட

சிறுதொழில்கள்.

இத் தகைய தொழில்கள் கிராமப்புறங்களில் தொடங்கி அவைகளை விரிவு படுத்த வேண்டும்.

அரிசி ஆலைகள், மாவு மில்கள், எள், கடலை, தேங்காய் முதலியவை பிழியும் எண்ணெய் ஆலைகள், பருத்தி அரவை ஆலைகள், மரம் அறுவை மில்கள், சிறிய சர்க்கரை ஆலை கள், கால்நடை தீவனம் கோழித் தீவனம் தயாரித்தல், பால் சேகரித்தல், பால் கடைதல், பால் பொருள் தயாரித் தல், செங்கல் தொழில், சவ்வரிசி சேமியா தயாரித்தல், கருங்கல் தொழில் , பமீன் பதனிடுதல், காய்கறிகள் பதனிடு தல் பழங்கள் பதனிடுதல், அட்டை தயாரித்தல் முதலிய இரண்ட ம் நிலையில ன சிறிய தொழில்கள் கிராமப்புறங் களில் மு ன்னுரிமை கொடுத்து வளர்க்கப்படவே எண்டும். அதற்க ைகோரிக் கைகளை முன்வைத்து கிராமப்புற அபி விருத்திக்கு முக்கிய இடம் கொடுக்கப்படவேண்டும்.

6. கிராமப்புற வாழ்க்கையை நவீனப்படுத்துதல்:

நகரங்களைப் போலவே கிராமப்புற வாழ்க்கையை நவீனப் படுத்த வேண்டும். வீட்டுவசதி, கழிப்பிடங்கள், பாதுகாக் கப்பட்ட குடி தண்ணிர், சுகாதாரம், வடிகால், சாலை வசதி, போக்குவரத்து வசதி, பொழுதுபோக்கு வசதிகள், விளை யாட்டு அரங்குகள் , நாடகம் சினிமா அரங்குகள், கல்வி முக்கிய காக ஆரம்பக்கல்வி, உணவு விடுதிகள், பொது தங்கு மிடங்கள் சுற்றுலா வசதிகள், முதலியவைகள் பெருகவும், கிராமப்புற வாழ்க்கை நவீன மயமாக்கவுமான கோரிக்கை கள் முன்வைத்து நிறைவேற்றப்பட வேண்டும்.

6. விவசாயத் தொழில் பயிற்சி:

விவசாயத் தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களின் உற்பத்தித்திறனை உயர்த்துவது மிகவும் அவசியம். குறைந்த பட்சக் கூலியை நிர்ணயிப்பதுடன், வேலை நேரம் , வேலை அளவு, ஆகியவற்றையும் திர் மானிக்க வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும். எல்லா வகையான விவசாயவேலை, மேல் பார்வை, மருந்து, உரம், விதை முதலியவை பற்றி நுட்பங்கள் சாகுபடி முறைபற்றிய பயிற்சி, விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கான பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட வேண்டும்.

7. l@ பன்னாட்டு-பொதுப்பிரச்சனைகள்:

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் கள், கிராமப்புற பாட்டாளிகள் என்றால், கிராமப்புறங்களிலேயே அடங்கிக் கிடக்கும் சிறைவாசிகள் அல்ல. நமது நாட்டு விவசாயமும்