பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 197

இதர கிராமத் தொழில்களும் நாட்டுடன் இனைந்தவை. இந்தத்தொழில்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் பல் வேறு மாநிலங்களிலும் இருக்கிறார்கள்.

நமது கிராமப்புற விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர் களும் கிராமப்புறப் பாட்டாளிகளும், நாட்டின் நிர்வாகத் தின் கீழ் உள்ளவர்கள். அரசியல் உரிமை வாக்குரிமை பெற் தவர்கள். பல்வேறு வகைகளில் வரி செலுத்துபவர்கள். எனவே அவர்களுக்கு இத்த நாட்டுப் பிரச்சனைகளில் அக் கறை இருக்க வேண்டும். அக்கறை மட்டுமல்ல, அதிக கவன மும் இருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் அரசியலிலும் அரசியல் பிரச்சனைகளிலும் ஜனநாயகப் பிரச்னைகளிலும் விவசாயிகளும் தொழிலாளர் களும் கிராமப்புறப் பாட்டாளிகளும் தலையிட வேண்டும். அப்பிரச்சனைகள் மீது தங்கள் செல்வாக்கைச் செலுத்த வேண்டும். நாட்டின் அரசியல் நிகழ்ச்சிகளையும் ஜனநாயக செயல்பாடுகளையும் தங்களுக்குச் சாதகமாகத் திருப்புவ தற்கு முயற்சிக்க வேண்டும்.

நமது நாட்டின் மிக முக்கியமான தேசியப் பிரச்சனைகளில் ஒன்று நமது நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடுமா கும். நமது நாடு ஒன்றுபட்டு இருந்தால்தான் நமது நாட்டின் சுதந்திரத்தையும் அரசுரிமையையும் பாதுகாக்க முடியும்.

நமது நாட்டில் அநேகம் சாதிகள், அநேகம் மதங்கள், மொழிகள், இனங்கள் இருக்கின்றன. அவைகளுக்கிடையில் வேறுபாடுகளும் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளிலும் ஒற்றுமை காண்பதுதான் நமது நாட்டின் நேர் ஆக்க நிலை வளர்ச்சியாக பண்பாக இருந்திருக்கிறது.

அதேசமயத்தில் நமது ஒற்றுமையின்மை காரணமாக நமக்கு பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன .

இந்திய நாடு ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த போது, நமது விடுதலைப் போராட்டத்தில் நாம் ஒற்றுமை கண்டோம் . அந்த ஒற்றுமையை இப்போது நமது சுதந்திரத் தைப் பாதுகாப்பதில், நமது ஜனநாயகத்தை வளர்ப்பதில், நமது முன்னேற்றத்திற்கான முயற்சிகளில், நாம் வளர்க்க வேண்டும்.

இந்திய ஒற்றுமையை வளர்ப்பதில் நமது கிராமப்புற மக்க ளுக்கு அதிகம் கடமை பங்கு இருக்கிறது. விவசாயிகளும் வசாயத் தொழிலாளர்கள், இத்ர் கிராமப்புறபாட்டாளி களும் தங்கள் ஒற்றுமையின் மூலம் தங்களுடைய பிரச்சனை களுக்கு நீர்வுகாண்டதுடன், நாட்டின் பிரச்சனைகளுக்குத் ர்ேவ காண உதவவம் மடியம்.