பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

நமது நாட்டின் வரலாற்றில் நீண்டகாலம் குறு நில மன்னர் கள், சிறு நில மன்னர்கள், பெரு நில மன்னர்கள் ஆட்சி நடத்தி வந்திருக்கிறார்கள். மன்னனுக்குப் பல பெயர்கள் உண்டு; அதில் ஒன்று காவலன் என்பது. மக்களைக் காப்பது அவன் வேலை என்பதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். உள் நாட்டில் மிருகங்கள், சமூக விரோதிகள், வெள்ளம் பஞ்சம் போன்ற கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து மக்க ளைக்காப்பதும், வெளிநாட்டுப் படை யெடுப்பிலிருந்து மக்களைக் காப்பதம் காவலனின் வேலையாகும்.

அத்துடன் இந்திய மன்னர்களின் ஆட்சித்துறையில் பொதுப் பணித்துறை மிக மக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.

மன்னர்களில் சிலர் செங்கோல் மன்னர்களாகவும் சிலர் கொடுங்கோல் மன்னர்களாயுமிருந்தனர் நமது நாட்டின் மன்னராட்சி முறைக்குப் பல நீதி முறைகள் வகுக் கப்ட்ட் டுள்ளன. அத்தகை அரச நீதி நூல்களில் ஆட்சி முறை யைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறப்பட்டிருக்கின்றன. அரசன் மட்டுமல்ல: அரசனுக்கு அமைச்சர்களும் இருந் தார்கள். இந்த அமைச்சர்களின் வேலை மன்னனுக்குத்துதி பாடுவதல்ல: அவனுக்குத் துணையாக இருந்து அறிவுரை கூறி, வரும் பொருள் உரைத்து, அவசியமானால் இடித்துக் கூறி வழி காட்டுவதாகும்.

அரசன் எவ்வாறு ஆட்சி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்தியப் பேரிலக்கியங்களில் மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றன. மகாபாரதக் கதை யில் பாரதப்போர் முடிந்த பின்னர், அம்புப்படுக் கையில் கிடந்த பீஷ்மனிடம் தருமனும் அவனுடைய தம்பியரும் செல்கிறார்கள். அப்போது பீஷ்மன் பாண்ட வர்களுக்கு எவ்வாறு ஆட்சி நடந்த வேண்டும் என்று அறி வுரை கூறுவதாக சாந்திபருவத்தில் வியாசர் விளக்கு கிறார்

வால் மீகி தனது ராம காதையில் பல இடங்களில் பாத் திரங்கள் வாய்மொழியாக அரசனின் கடன்ம களைப் பற்றிச் சுட்டிக் காட்டுகிறார். க பனும் தனது ராமாயணத்தில் அவன்காலத்திய ராஜ நீதியை விளக்குகிறான்.

கெளடில்யன் என்னும் சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் ஆட்சி முறையைப் பற்றி விரிவுறக் கூறும் பெருநூலாக விளங்குகிறது. வள்ளுவத்தின் பொருட்பால் முழுவதுமே, நல்லாட்சியைப் பற்றி, நாட்டைப்பற்றி, அமைச்சைப் பற்றி

விரிவுபடமிக நுட்பமாக எடுத்துக் கூறுகிறது. இளங்கோவடி