பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து, நாட்டின் சுதந்திரத்திற் கும் அரசுரிமைக்கும் அபாயம் விளைவிக்கும் ஏகாதிபத்திய சக்திகள், வகுப்பு வாத சக்திகள், நமது நாட்டின் நிலையான ஆட்சியை நிலை குலைக்க முயற்சிக்கிறார்கள். இந்தத்திய சக்திகளின் சதி வேலைகளுக்கு இந்திய முதலாளித்துவ நிர் வாகம் இடமளிக்கிறது.

ஏகாதிபத்தியச் சக்திகள் பன்னாட்டு கூட்டுநிறுவனங்களின் சுரண் டலைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்திய அரசி யலை பலவீனப்படுத்தி தனக்குச்சாதகமாக வைத்துக் கொள்ள விரும்புகிறது. -

பன்னாட்டு கூட்டுநிறுவனங்களின் ஏகபோக முதலாளிகளின் கூட்டுக்கொள்ளையினால், உலக முதலாளித்துவ மார்க்கட் சுரண்டலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் இதர கிரா மப்புற மக்களும் ஏகாதிபத்திய சக்திகளின் பொருளாதார சுரண் டலையும் அரசியல் தலையீடுகளை யும் எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கான கோரிக்கைகள் தேசிய கோரிக்கை களாகும். அத்தகைய தேசிய கோரிக்கைகளிலும் கிராமப்புற மக்களின் வர்க்கஸ்தாபனங்கள் முன் நிற்கவேண்டும்.

நாட்டின் சுதந்திரம் இறையாண்மை ஜனநாயகம் , ஒற்றுமை, ஒருமைப்பாடு, அந்நியத் தலையீடுகளை எதிர்த்தல் முதலிய பொதுவான தேசிய அரசியல் பிரச்சனைகளில் மட்டுமல்லாமல், நாட்டின் பொதுத்துறை வளர்ச்சி தொழில் முன்னேற்றம், விவசாய வளர்ச்சி, கல்விவளர்ச்சி பொது சுகாதாரம், உடற்பயிற்சி, தொழில் நுட்ப வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, முதலிய, தேசிய பொருளாதார கலாச்சார வளர்ச்சி பற்றிய பிரச்சனைகளிலும் கிராமப்புற வர்க்க ஸ்தாபனங் கள் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் இந்தியாவின் நலன்களோடும், பாரம்பரியத் தோடும் இணைந்த பல பன்னாட்டுப் பிரச்சனைகளும் உள்ளன.

முக்கியமாக இந்திய நாட்டிற்கும் இந்திய மக்களுக்கும் உலகசமாதானம் மிகவும் அவசியம். ஆயுதக் குறைப்பு அணுகுண்டு ஒழிப்பு முதலிய முக்கிய உலகசமாதானத் திற்கான கோரிக் கைகள் இந்து மகாசமுத்திரம் அமைதி மண்டலமாக்குதல் முதலிய கோரிக்கைகள் இந்திய மக்களின் நலன்களுக்குகந்தவைகளாகும்.

இந்திய நாட்டிற்கும் இதர வளர்ச்சியடைந்த நாடுகளுக் கும் இடையில் நல்லுறவு நட்புறவு, பொருளாதார, வர்த்தக உறவுகள் கலாச்சார உறவுகளை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசி ம் நமது நாட்டின் நலன் களுக்கு உகந்ததுமாகும். *