பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 0 C கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

வழியில் நாட்டைக் கொண்டு செல்வதற்கான புதிய அணி சேர்க்கை அமைவது அவசியமாகும் அத்தகைய அரசியல் அணியில் இந்திய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இதர கிராமப்புறப் பாட்டாளி வர்க்கங் களும் அவர்களின் வர்க்கஸ்தாபனங்களும் ஒன்று சேர வேண்டும்.

அ. தற்கான முறை பில் கிராமப் புறபாட்டாளிகள் அரசியல் தெளிவு பெற வேண்டும் . அ. தற் காக விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் இதர கிராமப் புறப்பாட் டாளிகளுக்கு அரசியல் பயிற்சி கொடுத்து அவர்களுடைய அரசியல் உணர்வு நிலையை உயர்த்த வேண்டும்.

ஏற்கெனவே தமது நாட்டு மக்கள் தங்கள் சொந்த அனுப வத்தின் மூலம், ஆட்சியை மாற்றிக் கொண்டுவந்துள்ளார் கள் இந்திய நாட்டின் தலைமையான அரசியல் கட்சி யாக முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இருந்தது. 1947-ம் ஆண்டில் இந்திய நாடு சுதந்தி ம் பெற்றபோது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து இந்திய தேசீய காங்கி ரஸ் கட்சி தலைவர்களிடம் தான் ஆட்சி மாறியது. தேசிய காங்கிரஸ் கட்சி இந்திய முதலாளித்துவத்தின் முதன்மை யான அரசியல் கட்சியாகும். ஆனால் நாடு சுதந்திரம் பெற்ற இருபது ஆண்டுகளில், பல மாநில ங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மாறியது 1967-ம் ஆண்டில் எட்டு ஒன்பது மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோற்று வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந் தன.

தமிழகத்திலும் 1967-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமாறியது. அதன் பின்னர் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வரவேயில்லை .

1967-ம் ஆண்டிற்குப்பின் நமது நாட்டின் அரசியலில் நெருக்கடியின் கீரல் வெளிப்படத் தொடங்கிவிட்டது. 1969-ம் ஆண்டில் நமது நாட்டின் வலுவான முதலாளித் துவக் கட்சியான இந்தி பதேசிய காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. அதன் பின்னர் ஆட்சியில் நீடித்த இ. காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியைப் பாதுகா த்துக்கொள்ள 1975-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டிய அளவிற்குச் சென்றது .

1977-ம் ஆண்டில் நாடு விடுதலை பெற்ற முப்பது ஆண்டு களில் நாட்டின் மத்திய ஆட்சியிலிருந்தே காங்கிரஸ் கட்சி யை மக்கள் தூக்கி எறிந்து விட்டார்கள்.

மீண்டும் வேறு மாற்று இல்லாததால் 1980ஆம் ஆண்டில் இ. காங்கிரஸ் ஆட்சி மத்தியில் ஏற்பட்ட போதிலும், பல மாநிலங்களில் இ. காங்கிரஸ் கட்சி வெற்றிபெற