பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

அரசியல் கல்விப் பயிற்சியும் உடற்பயிற்சியும், அமைப்பு நிலைப் பயிற்சியும் கொடுக்க வேண்டும்.

தொடர்ச்சியான பயிற்சி முகாம்கள் மூலம் நமது கிராமப் புற வர்க்க ஸ்தாபனங்களில் முன்னணியில் உள்ள ஊழியர் களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்.

இந்த மகத்தான -- கிராமப்புற மக்களின் புரட்சிகரமான சேவைக்குப் பல்லாயிரம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள முன் வர வேண்டும்.

10. நாட்டின் புதிய அரசியல் மாற்றங்கள்

1987-ம் ஆண்டில் தொடங்கிய மக்களியக்கம், ஒரு ஆட்சி மாற்றத்திற்கான இயக்கமாக வளர்ந்தது. 1989-ம் ஆண்டில் நடை பெற்ற பொதுத் தேர்தலில், மத்தியில் இ. காங்கிரஸ் ஆட்சிமாற்றப்பட்டது. வி. பி. சிங் தலைமையில், ஜனதா தளம் அஸ்ஸாம் கணதந்திர பரிஷத், தெலுங்கு தேசம், திராவிட முன்னேற்றக் கழகம் , காங்கிரஸ் (எஸ்) முதலிய கட்சிகள் சேர்ந்த தேசீய முன்னணி என்னும் பெயரில் ஒரு புதிய கூட்டாட்சி ஏற்பட்டது. இந்தக் கூட்டாட்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட்(மார்க்ஸிஸ்டு) பார் வேட் பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகிய இடது சாரிக் கட்சிகள் ஆதரவு கொடுத்தன. தேர்தலில் மற்றொரு முக்கிய கட்சியாக வெளிப்பட்ட பாரதீய ஜனதாக்கட்சியும் தேசீய முன்னணி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது. பாராளு மன்றத் தேர்தல்களுக்கு முன்னரும் பின்னரும் நடந்த பல

சட்டமன்றத் தேர்தல்களிலும் பல ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன.

முக்கியமான ) மாநிலங்களிலும் முக்கியமான

காங்கிரஸல்லாத வேறு பல கட்சிகளும் ஆட்சிக்கு வந்தன. அஸ்ஸாமில் அஸ்ஸாம் கணதந்திர பரிஷத் கட்சி ஆட்சிக்கு வந்தது . மேற்கு வங்கத்தில் இடது சாரி அணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. ஒரிஸா, பீகார், உத்திரப் பிரதேசம், அரியானா முதலிய மாநிலங்களில் ஜனதா தள் ஆட்சி

ஏற்பட்டது. மத்தியப் பிரதேசம், இமாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சி ஏற் பட்டது. ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் ஜனதா

தளம் பாரதீய ஜனதாக்கட்சியின் கூடாட்சி ஏற்பட்டது. தமிழ் நாட்டில் திமுக ஆட்சி ஏற்பட்டது. கேரளாவில் இடது சாரி ஜனநாயக முன்னணி ஆட்சி, ஏற்பட்டது. ஆந்திரப் பிரதேசம் கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இ. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி,

நாட்டின், அநேகமாக, எல்லா ஆகயை அரசியல் கட்சி களும் ஒரு பக்கம் ஆளும் கட்சிகளாகவும் அதே சமயத்தில்