பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

களும் சூத்திரர்களுக்கு ஒப்பானவர்களே என்றும் எழுதி வைத்து பிராமணர் எல்லா உரிமைகளையும் சலுகைகளை யும் பெற்றனர்.

பிராமணர்களுடைய இந்த மேலாதிக்கத்தை ஏற்கமறுத்தும், தங்களுக்கும் சம உரிமையும், சுவர்க்கத்தில் இடம் இருக்க வேண்டும் என்றும் கூடித்திரியர்கள் போராடினர். இவ் வாறு பிராமணர்களுக்கும் கூத்திரியர்களுக்கும் நடந்த போராட்டங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நமது நாட்டில் நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது

கடைசியில் rத்திரியர்களையும் உயர்வானவர்கள் என்று ஏற்று அவர்களுக்கும் சுவர்க்கத்தில் இடம் உண்டு விர சு வர்க்கம் உண்டு என்று பிராமணர்கள் சம்மதித்து இருவரும் அதாவது பிராமணர்களும் கூத்திரியர்களும் சமரசம் செய்து கொண்டு, கூத்திரியன் அரசனாகவும், பிராமணன் அமைச்ச னாகவும் சேர்ந்து இருந்து சமுதாயத்தின் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதைப் பல கதைகள் மூலம் அறியலாம்.

பரசுராமன் என்னும் பிராமணன் , கூடித்திரியவம்சத்தையே அழித்துத் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்றான் என்றும் கடைசியில் இராமன் என்னும் கூடித்திரியனிடம் தோல்வியடைந்து தனது சக்தி முழுவதையும் இராமனி டத்தில் ஒப்படைத்துவிட்டு வனம் சென்று விட்டான் என்றும் ஒரு கதை கூறுகிறது.

கம்பன் தனது ராமாவதாரக் கதையில் கூறுகிறான் இராமன் மிதிலையில் சீதையை மனம் முடித்து அனைத்து பரிவாரங்களுடன் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக் கிறான். அப்போது பரசு ராமன் எதிர்ப்பட்டு:

உலகெலாம் முனிவர்க்கு ஈந்தேன்

உறுபகை ஒடுக்கிப் போந்தேன்

அலகில் மாதவங்கள் செய்து ஒர் அருவரை இருந்தேன்’ ’

இதன்பொருள்:

உலகையெல்லாம் வென்று முனிவர்களாகிய பிராமணர் களுக்குக் கொடுத்தேன் எங்களுக்கிருந்த பகையை எல்லாம் அடக்கி ஒடுக்கி எங்களது மேலாதிக்கத்தை நிலை நாட்டி விட்டு மேலும், பல தவங்கள் செய்து மலையின் உச்சியில் இருந்தேன். அப்போது உனது வலிமையைக் கேள்விப்பட்டு உன்னையும் எதிர்க்க எனது விஷ்ணு தனுசுடன் வந்திருக் கிறேன் என்று பரசுராமன் ராமனிடம் எதிர் நின்று

கூறுகிறான். H