பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 211

வாதிட்டு, தனது சமயக்கருத்துக் களை பரப்பியதாகக்கதை

கூறுகிறது.

வைதீக சமயங்களும் வருணாசிரமதர்மங்களும். புத்தம் சம னத்தின் தாக்குதல்களால், அடிப்படை ஆட்டம் கண்டது. இந்த அபாயங்களுக்குப் பின்னர் வைதீக சமயங்களின் உத்தி கள் மாறின. சைவ, வைணவ சமயங்கள் புதிய உத்திகளை மேற்கொண்டு புதிய இயக்க வழிகள் வெளிப்பட்டன. பக்தி இயக்கம் தோன்றியது,

பகவத் கீதை பிறந்தது. அதன்படி பக்தி செலுத்தியவன், பகவானிடத்தில் சரணாகதியடைந்தவன் முக்தி அடைவான் விடுதலை பெறுவான். மோட்சத்தை அடைவான் என்று கீதை கூறியது. அதன்படி பக்தி இயக்கம் வளர்ந்தது. பரவி யது. மக்களை ஈர்த்தது.

பக்தி இயக்கத்தை பலவேறு பிரிவுகளைச் சேர்ந்த மகான் களும் பக்தர்களும் முன்னெடுத்துச் சென்றதாகப் பல கதை களும் கூறுகின்றன. தமிழகத்தில் பல வேறு வகுப்புகளை, பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பெண் பாலர் உள்பட பல நாயன் மார்களும் ஆழ்வார்களும் ஆச்சரிபார்களும் சமய குரவர்களும் தோன்றி சாதி வேறுபாடுகள் இன்றிபக்தியைப் பரப்பி இந்து சமயத்தைப் பாதுகாத்து பரப்பினார்கள். சங்கரர், ராமானுஜர், மத்துவர் போன்ற பெரிய தத்துவ ஞானிகள் பக்தி இயக்கத்திற்கு தளம் அமைத்தனர். கீதைக்கு விளக்கம் செய்தனர், நந்தனார். திருப்பாணாழ் வார் போன்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மகான் களும் பக்தி இயக்கத்தின் தலைமையில் இருந்தனர்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஒளவை எடுத்துக் கூறினார்.

குகனே டு ஐவரானோம், குன்று சூழ்வான் மகனோடு அறு வரானோம், நின்னோடு எழுவரானோம் என்று வீடணனி டத்தில் ராமன் கூறியதாகக் கம்பர் கூறுகிறார்.

கர்ணன் தன்னைப் பலரும் இழிகுலத் தான் எனக் கூறிய போது, தனது திறமையையும் ஆற்றலையும் காட்டப் போராடியதாக பாரதக் கதை கூறுகிறது.

பக்தி இயக்கத்திற்குப்பின் வந்தசித்தர்களும் திருமூலர்முதல் வடலூர் வள்ளலார் வரை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்னும் கருத்தைப் பரப்பினர்.

சாதி வேறுபாடுகளையும் பாகுபாடுகளையும் எதிர்த்து தேசீய விடுதலை இயக்கத்தின் தீவிரவாதிகள் குரல் கொடுத் தார்கள். தீண் டாமையை ஒழிக்கவும், ஆலயப் பிரவேசம் நடத்தவும் இயக்கங்கள் நடைபெற்றன. காந்திஜி அரிஜன்