பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 215

பிலிருந்து விலகிக் கொண்டது. அதன்பின் இ. காங்கிரஸ் ஆதரவில் ஒரு சிறுபான்மைக்குழுவின் ஆட்சி ஏற்பட்டது. இந்த ஆட்சிக்கு சோந்த ஆள் பலமும் இல்லை. கொள்கை பலமும் இல்லை.

மீண்டும் இந்திய மக்களுக்கு முன்பாக சில கொள்கைப் பிரச்சனைகள் முன் நிற்கின்றன. நிர்வாக முறையில் ஜன நாயக வழிமுறைகள், மத்திய மாநில அரசுகளின் சீரான உறவு முறை, விவசாயத் தொழிலுக்கும் விவசாயிகளுக்கும் உரியநியாயம் வழங்குதல்,வேலை செய்யும் உரிமை,தொழி லாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு, பிரச்சார சாதனங் களில் சுய உரிமை, மதச்சார்பின்மை, வகுப்பு ஒற்றுமை சமூக நீதி தேசிய ஒற்றுமை ஒருமைப்பாடு முதலிய அடிப் படை கொள்கைப் பிரச்சனைகள் நாட்டு மக்கள் முன்பு நிற்கின்றன.

இந்த அடிப்படைக்கொள்கைகளைச் செயல் படுத்தும் முறை யில் நாட்டில் சமுதாய மாற்றமும் அரசியல் மாற்றமும் ஏற் பட வேண்டும். இதில் தேசிய முன்னணிக் கட்சிகளும் இடது சாரிக்கட்சிகளும் சேர்ந்து நின்று செயலாற்றும் வாய்ப்பு கள் ஏற்பட்டிருக்கிறது.

இது இரண்டாவது கட்ட விடுதலைப் போராட்டமாகும் இதில் பெருவாரியாக விவசாய மக்களும் கிராமப்புற மக்க ளும் தொழிலாளர்களும், நடுத்தரமக்களும் பங்கு பெறச் செய்ய வேண்டும்.

இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் ,பழங்குடிமக்கள், பிற்படுத்தப் பட்டமக்கள், சிறுபான்மைமக்கள் முதலிய ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும், அரசியல் பூர்வமாகவும் நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை முன் நிறுத்தியும் ஒன்று திரட்ட வேண்டும்.

இந்தச் செய்தியை வீடுதோறும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.