பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1

முடிவுரை

நமது நாட்டின் விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் இதர கிராமப்புறமக்கள், இந்த நாட்டின் மக்கள் தொகை யில்-எண்பது சதவீதம் பேர்களாகும். இவர்களில் பெரும் பாலோர் இன்று வறுமைக்கோட்டின் கீழே வாழ்கிறார்கள்.

‘பாரத நாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்’ என்று பாரதி ஆணையிட்டான். நாம் பாரத மக்கள். நமது மக்களில் எண்பது சதவீதம் பேர் வறுமைக்கோட்டின் கீழே உன்ள நமது கிராமப்புற மக்களா கும். நமது பாரத நாடு எல்லா வளங்களையும் பெற்றிருக் கிறது, வற்றாத ஆறுகளும், வளமான பூமியும் கடுமையாக உழைக்கும் பாட்டாளிகளையும் கொண்டநாடு. இருப்பினும் வறுமையால் வாடும் மக்களை நிறையப்பெற்றிருக்கிறோம்.

செல்வத்தின் உச்சத்திற்குச் செல்லும் வாய்ப்புகளைப் பெற். றிருக்கிறோம். ஆயினும் வறுமையின் அடி ஆழத்தில் உள்ள பெரும்பாலான மக்களைக் கொண்டிருக்கிறோம். நாடு விடு தலை பெற்ற பின்னர் நாற்பது ஆண்டுகளில் பத்து மடங்கு நமது செல்வத்தைப் பெருக்கி இருக்கிறோம். ஆயினும் வறுமையினால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித் திருக்கிறது.

இந்த நாடு அறிவின் உச்சிக்குச் சென்றிருக்கிறது. ஆயினும் நாட்டின் பெரும்பாலான மக்கள் அறியாமையின் அடி ஆழத் தில் வீழ்ந்து கிடக்கிறார்கள் .

சிறந்தபடிப்பாளிகளைவிஞ்ஞானிகளை,பொறியியல் வல்லு நர்களை , நிபுனர்களை, ஆராய்ச்சியாளர்களை. கனக்கர் களை, கணிதமேதைகளை, ஆலை நிர்வாகிகளை, டாக்டர் களை உண்டாக்கியதில் உலகில் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் அடுத்தபடியாக பாரதநாடு உலகில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஆயினும் உலகில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத மக்களில் பாதிப்பேர் இந்த நாட்டில் தான் இருக்கிறார்கள்.