பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

ஆண்டான்களின் கொடுமைகளை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டிருக்கிறது. எத்தனையோ தன்னகங்காரம் பிடித்த மூர்க்கர்களை, முரட்டுக்காளைகளை அடக்கி மக்களுக்குச் சேவை செய்ய வைத்திருக்கிறது.

எத்தனையோ கொடுங்கோல் மன்னர்களை விழ்த்தி

நல்லறம் பாடிய மன்னனை வாழ்த்தி

நயம் புரிவாள் எங்கள் தாய் அவர்

அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக்கூத்திடுவாள்-என்று பாரதிபாடுகிறார்.

எத்தனையோ படையெடுப்புகள், வெள்ளங்கள், பஞ்சங்கள் கடல் பொங்குதல்களைக் கடந்து சிறந்த தத்துவ ஞானக் கருத்துக்களை, உலகம் வியக்கும் சாகாவரம் பெற்ற இதிகா சங்களை, காவியங்களை, கணித நூல்களை, அரசியல் பொருளாதார, அறிவியல் கருத்துக்களை உயிர்த்துடிப்பு மிக்க அற்புதமான சிலைகளை, உயர்ந்த கோபுரங்களை உலகுக்கு அளித்து பாரதநாடு பெருமை பெற்றது.

ஆங்கிலேயர் ஆட்சி வன்மைமிக்கதாக இருந்தது. சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று ஆங்கிலேயர் கள் தங்களைப்பற்றி பெருமையடித்துக் கொண்டார்கள். அந்த ஆங்கிலேயர்கள் தங்கள் ஆயுதங்களால் வர்த்தகத் தால், தங்கள் தொழில் வலிமையால், நிர்வாகத்திறமை யால், ராஜதந்திர பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்தியாவில் தங்கள் ஆட்சியை அமைத்தார்கள். இந்தியமக்கள்ை அடிமைப்படுத்தினார்கள். அந்த ஆங்கிலேயர்களுக்கு இந்திய நாட்டைக்கைப்பற்றுவதற்கு .JD/ ஆண்டுகளாயிற்று. நாட்டை முழுமையாகப் பிடித்து நிலையான ஆட்சியை ஏற்படுத்தியதாகக் கூறி தொண்ணுாறு ஆண்டுகளுக்கு மேல் இந்தத் திருநாட்டில் அவர்கள் ஆட்சியில் நீடிக்க முடிய வில்லை.

இந்தியராணுவம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் தாங்கிய கலகத்தைச் செய்தது. இந்திய இளைஞர்கள் வேலாயுதத்தையும் சூலாயுதத்தையும், ப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும் எடுத்து அந்நிய ஆடணியை எதிர்த்துப் போராடினார்கள். இந்திய விவசாயிகள் வரி கொடுக்க மாட்டோம் என்று உரத்தகுரல் கொடுத்து வானம் பொழி யுது பூமி விளையுது உனக்கு ஏன் வரிப்பணம் என்று சிந்து பாடினார்கள். அறிவாளிகள், படிப்பாளிகள், ஆங்கிலேய நிர்வாகத்தை எதிர்த்தார்கள். வர்த்தகர்கள் போட்டிக் கப்பல் ஒட்டினார்கள். அரசியல் சாசனம் உங்களுக்கு எழுதத் தெரியுமா எனக் கேட்ட ஆங்கிலேய ஆளுநருக்கு 24 மணி