பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 22 1

கேரளத்தில் இரண்டாவது பொதுத் தேர்தலின் போதே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவர்கள், இந்தியக் கம்யூனிஸ்டுகள்.

இந்தியாவிலேயே முதல் முதலாவதாக நிலப்பிரபுத்துவம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியில்,

இன்று இ. காங்கிரஸ் தமைமைக்குப் பதிலாக அல்லது வேறு ஒரு முதலாளித்துவத் தலைமைக்குப் பதிலாக, ஒரு தொழிலாளி விவசாயி கூட்டணியின் இடது சாரி ஜன நாயக மாற்றணியின் தலைமை என்னும் கருத்தை முன் மொழிந்துள்ளது கம்யூனிஸ்டு இயக்கம்.

கடந்த அறுபது ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது சொல்லாத அவதுாறு இல்லை. பேசாத வசைச் சொல் இல்லை. கம்யூனிஸ்டுகளை அந்நிய ஏஜண்டுகள் என்றார் கள். ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் என்றார்கள் . கம்யூ னிஸ் தத்துவம் அந்நிய தத்துவம் என்று கூறினார்கள் . சுதந் திரப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டி ருந்த கம்யூனிஸ்டுகளை, காட்டிக் கொடுத்தவர்கள் என்று வசை பாடினார்கள். i

கட்சியை நடத்துவதற்கு உங்களுக்குப் பணம் ஏது என்று கம்யூனிஸ்டுகளைக் கேட்டார்கள். கம்யூனிஸ்டுகள் சிரிக்கத் தெரியாத முசுடுகள் என்றும் கலைரசனை இல்லாத முண்டங்கள் என்றும், சோறா மானமா என்று கேட்டால் சோறு தான் என்று கூறுபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றும் பேசினார்கள் . கடைசியாக கம்யூனிஸ்டுகளை அமெரிக்கக் கைக்கூலிகள் டாலர் வாங்கிகள் என்று பேசினார்கள். அப்படிப் பேசியவர்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கையடக்க மாகப் போய் விட்டார்கள் .

அத்தனை அவது றுகளையும் அடக்கு முறைகளையும் தாங்கி நின்று கம்யூனிஸ்டு இயக்கம் வீர நடை போட்டுக் கொண்டு வருகிறது.

கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் எதிர் காலத்தோடு இணைந்த வர்கள். கம்யூனிஸ்டுகள் இல்லாமல் இந்தியாவின் எதிர் காலம் இல்லை.

இந்தியாவின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இதர கிராமப்புறப் பாட்டாளிகள், கம்யூனிஸ்ட் இயக்கத் தெத் தழுவி நின்று, இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் அங்கமாய், உலகப் பாட்டாளி வர்க்கப் பேரியக்கத்தின் ஒரு பகுதியாய், பாரதத் திரு நாட்டை புரட்சிகரமாக மாற்றி