பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்நியர் ஆட்சிக் காலத்தில், ஏற்பட்ட வீழ்ச்சி

ஐரோப்பியர்கள் ஒவ்வொரு நாட்டவராக இந்தியாவிற்கு பதினாறாம் நூற்றாண்டிலிருந்து வரத் தொடங்கினார்கள், போர்த்துக் கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் ஆகியோர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். வந் தவர்கள் முதலில் வியாபார் நோக்கத்துடன் தான் வந்தார்கள். கடைசியாக வந்தவர்கள் பிரஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும்; அவர்களுக்குள் ஐரோப்ப்ாவிலும் இந்தி யாவிலும் போர்கள் நடந்து அதில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றி பெற்ற ஆங்கிலேயர்களின் கிழக்கு இந்தியக் கம்பெனி என்னும் பெயர் பெற்றிருந்த வியாபாரக் கம்பெனி இந்தியாவில் நிலை பெற்றுவிட்டது.

ஆங்கிலேய வியாபாரிகள் முதலில் இந்தியாவில் கிடைத்த உபரிப்பொருள்களையும் கைத்தொழில் உற்பத்திப் பொருள் களையும் வாங்கிக் கொண்டு போய் அவர்களுடைய நாடு களிலும் அவர்களுடைய பக்கத்து நாடுகளிலும் விற்பனை செய்து அதன் மூலம் பொருள் ஈட்டினார்கள்.

கிழக்கிந்திய வியாபாரக் கம்பெனியை நடத்திக் கொண் டிருந்த ஆங்கிலேயர்கள் , இந்திய நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த மன்னர்களுக்கிடையில் ஏற்பட்ட போட்டி பொறாமை சண்டை சச்சரவு ஆகியவை களையும், நாட்டைப் பற்றியோ ஆட்சியைப் பற்றியோ கவலைப்படா மல் ருந்த மக்களையும் கண்டு அவற்றைப் பயன் படுத்தி நாட்டையே படிப்படியாகக் கைப்பற்றி அதைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள்.

1757 - ஆம் ஆண்டில் வங்காளத்தில் பிளாசி என்னும் இடத்தில் அந்தப் பகுதி மன்னர்களுக்கும் ஆங்கிலேயர் களுக்கும் நடந்த சண்டையில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றார்கள். அது முதல் வங்காளத்தின் பெரும் பகுதி