பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

ஆங்கிலேயக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் பின்னர் தென் இந்தியாவில் வந்தவாசியில் நடைபெற்ற போரில் ஆங்லேயர்கள் வெற்றி பெற்ற பின்னர், படிப் படியாக தென் இந்தியாவும் பிரிட்டிஷ் கம்பெனியின் ஆளுகையின் கீழ் வந்தது, இவ்வாறு படிப்படியா நூறு ஆண்டுகளில் இந்தியா முழுவதையும், இன்று இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா, இலங்கை என்றுள்ள நாடுகள் அனைத்தையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றித் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்துவிட்டார்கள்.

இந்த நூறு ஆண்டுக் காலத்திலும் ஆங்கிலேயர்கள் சுலப மாக இந்திய நாட்டைக் கைப்பற்றி விடவில்லை. ஆங்கிலப் படைகளுக்கு நமது நாட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்திய நாட்டில் இருந்த சிறிய, பெரிய மன்னர்களும் அவர்களுடைய படைகளும் பல இடங்களில் மக்களும் கூட ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் எடுத்துச் சண்டை போட்டிருக்கிறார்கள்.

கடைசியாக 1857 ஆம் ஆண்டில் வட இந்தியா முழு வதிலும் பல இடங்களில் இந்திய ராணுவம் ஆங்கிலேயர் கம்பெனி ஆட்சியை எதிர்த்துப் பெரிய போர் நடை பெற்றது. இந்த ப் போரிலும் இந்தியப் படைகள் தோற்று

ட்டன. ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்

இந்தப் போரை ஆங்கிலேயர்கள் சிப்பாய்க்கலகம்’ என்று கூறினார்கள். இந்தப் போரை முதலாவது இந்திய விடுதலைப் போராட்டம் என்று காரல் மார்க்ஸ்

இந்தியாவைப்பற்றிய தனது கட்டுரைகளில் குறிப்பிடு கிறார். எனவே ஆங்கில ஆட்சிக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய முதலாவது விடுதலைப் போராட்டமே இந்திய ராணுவமும் மக்களும் கலந்து கொண்ட ஆயுதம் தாங்கிய போராட்டமாகவே இருந்தது என்பது வரலாற்று உண்மை.

1857 ஆம் ஆண்டில் ஆங்கிலேயக் கம்பெனி ஆட்சிக்கு எதிராக நடை பெற்ற விடுதலைப் போராட்டத்திற்குப் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றம் தலையிட்டு, இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை 1858 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் அரசாங் கமே நேரில் எடுத்துக் கொண்டு விட்டது.

அது முதல் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியாக இந்தியா வில் ஒரு வைஸ்ராயும் அவருக்கு ஒரு ஆலோசனைக் குழு வும் இருந்து இந்தியா மீது ஆங்கிலேயர்கள் தங்கள் நேரடியான ஆட்சியை நடத்தினார்கள்.

ஆங்கிலேயக் கம்பெனி ஆட்சிக் காலத்தில்

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலம்