பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 25

தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு நூறு ஆண்டுக்காலம் என்று கூறலாம்.

இந் த நூறாண்டுக் காலத்தில் நமது நாட்டில் என்ன நடந்தது என்பது இந்திய நாட்டின் வரலாற்றில் ஒரு சோகக்கதை யாகும். இந்த சோகக்கதையின் இடையில் அவ்வப்போது இந்தி; விவசாயிகள் நடத்திய வீரப்போராட்டங்களும் மின்

வட்டுகளைப்போல், இடி முழக்கங்களைப் போல் தோன்றி மறைந்துள்ளன.

ஆங்கிலேய வியாபாரிகள் நமது நாட்டில் புகுந்து முதலில் நமது நாட்டில் கிடைத்த பல்_வேறு உபரிப் பொருள்களை வாங்கி,விற்பனைக்காக ஐரோப்பாவிற்குக் கொண்டு சென்றார்கள். அவற்றில் விவசாய விளைபொருள்கள் தானியம், பழங்கள், மினகு இலவங்கம் முதலிய வாசனைப் பொருள்கள், சந்தனக் கட்டைகள், பல்வேறு உயர்வான மரங்கள், யானைத்தந்தங்கள், ஆடுமாடுகளின் தோல்கள், கிராமத் தொழில்கள் மூலம் உற் பத்தியான பட்டாடைகள் துணி ஆடைகள், வேலைப்பாடுகள் கொண்ட கம்பளிகள், சால்வைகள், மரச்சாமான்கள், தேயிலை, காப்பி, ஏலக்காய், தேங்காய் எண்ணெய் முதலிய பல வகைப் பொருள்க ள யும் ஆங்கிலேயர்கள் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.

தலாவதாக இந்த வியாபாரத்தை ஆங்கிலேயர்கள் மிகவும் செய்தார்கள். நமது நாட்டிலேயே உள் நாட்டுத் தரகர்களைப் பிடித்து அவர்கள் மூலம் நமது நாட்டு விவசாயிகளிடத்தில், கிராமப்புற மக்களிடத்தில் கைவினைஞர்களிடத்தில் குறைவான விலைக்கு வாங்கிக் கொண்டு போனார்கள்.

இரண்டாவதாக ஆங்கில வியாபாரிகளுக்கு இந்தியாவைப் பற்றிய, இந்திய மக்களைப் பற்றிய அனுபவம் அதிகரித்தது. இந்திய மக்கள் எதையும் நம்பும் சுபாவத்தை அவர்கள் அறிந்து கொண்டார்கள். அதை வைத்து இந்திய மக்களை ங்கிலேய வியாபாரிகள் ஏமாற்றியும் மோசடி செய்தும் ந்திய நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு LITTTTIT TT.

ன்றாவதாக ஆங்கிலேய வியாபாரிகளும், சிப்பந்திகளும் நீஃ. மக்களிடம் வாங்கிய பொருள்களுக்கு பொய்க் கண்க்குகள் எழுதியும் ஏமாற்றியும் இந்த நாட்டின் செல் வத்தைக் கொள் ைளயடித்துக் கொண்டு போனார்கள்.

நான்காவதாக,பல ஆங்கிலேய வியாபாரிகளும் கம்பெனியின் சிப்பந்திகளும் ஆயுதம் தாங்கிய வீரர்களை வைத்துக் கொண்டு கிராமங்களில் புகுந்து தங்க நகைகள், வெள்ளிச் சாமான்கள் முதலியவைகளைக் கொள்ளையடித்து நமது செல்வங்களை எடுத்துக் கொண்டு போனார்கள்.