பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 O கிராமப் புறப் பாட்டாளிகளை நோக்கி . .

ஐந்தாவதாக ஆங்கிலேய வியாபாரிகள்.இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் ஆண்டுகொண்டிருந்த சிறிய பெரிய மன்னர் களுக்கிடையில் சண்டையை மூட்டி விட்டு, ஒருவருக்கு எதிராக-மற்றொருவருக்கு ஆத வாகத் தங்கள் படைகளை அனுப்பினார்கள். இந்தப்படை வீரர்கள் போகு மி மெல் லாம், தானியங்கள், துணி மணிகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இதர பல பொருள்களையும் கொள்ளை யடித்து எடுத்துக்கொண்டு போனார்கள்.

காவல் இல்லாத காட்டில் ஆடும டுகள் புகுந்து மேய்வதைப் போல நாட்டை அந்நியர்கள் மேய்ந்து சின்னா பின்னப்படுத்தினர்.

உள் நாட்டு நிர்வாகமும் சரியாக இல்லை. அந்நியர்களின் கொள்ளைக்கும் அளவு இல்லை இவ்வாறு நாட்டு மக்கள் தங்கள் செல்வங்களை இழந்து கொண்டு வந்தார்கள். ஆயி னும் இதில் ஆங்கிலேய வியாபாரிகளும், கம்பெனியின் சிப் பந்திகளும் கொள்ளையடித்துக் கொழுத்தார்கள். இந்த அந்நிய வியாபாரிகளுக்கு புரோக்கர்களாக இருந்த இந்தியத் தரகர்களுக்கும் இதில் கொஞ்சம் பங்கு கிடைத்தது.

ஆறாவது இந்த நூறு ஆண்டுகளிலும் பிரிட்டிஷ் கம்பெனி யின் படைகளும, சில இடங்களில் பிரஞ்சு கம்பெனிப் படை களும், இந்திய மன்னர்களின் படைகள் ஒன்றோடொன்று மாறிமாறி சண்டை போட்டுக் கெண்டிருந்ததால் மக்கள் பல கொடுமைகளுக்கும் ஆளானார்கள். அந்த இடங்களில் சாதாரண மக்களின் உடமைகளும் செல்வங்களும் படைகளால் சூறையாடப்பட்டன.

பதினெட்டாம் துாற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் நாட்டின் வடக்குப் பகுதிகளில்-இப்போதுள்ள வட ஆற் காடு தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டப் பகுதி களில் ஆங்கிலேயர்க் கம்பெனி துருப்புகள், ஆற்காடு நவாபின் படைகள், பிரஞ்சுக்காரர்களின் ராணுவம், திப்பு சுல்தான் படைகள் ஆகியவை பல போர்களை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இந்தப் பகுதி மக்க ளுடைய உடமைகள் குறையாடப்பட்டதோடு ஆடு மாடுகள் எல்லாம் படைகளால் அடித்துத் தின்று தீர்க்கப்பட்டது. அதனால் இந்தப் பகுதிகளில் ஆடு மாடுகளின் இனமே அழிந்து போய், சாகுபடியும் நடைபெறாமல் லட்சக்கணக் கான மக்கள் செத்து மடிந்தார்கள். இந்தக் கொடுமையைத் தாங்காமல் தான், இராமலிங்க சுவாமிகள் கொலையை நிறுத்து, மக்கள் பசியைப் போக்கு, கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக. என்று குரல் கொடுத்துள்ளார்.