பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.

முறையிலும் கிராமப்புறத் தொழில் முறையிலும் Ll) கட்டாய மாற்றங்களைக் கொண்டு வந்தது.

இதன் விளைவுகள் மிகவும் கொடுமையானவை. இந்தக் கொடுமைகள் இந்திய மக்களின், குறிப்பாக கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் நீங்காத -நீண்டகாலம் நீடிக்கின்ற அழிவுகளையும் சேதங்களையும் உண்டாக்கி விட்டன.

முதலாவதாக, ஆங்கிலேயர் ஆட்சியில் புதிய முறையிலான, தங்களுக்குச் சாதகமான நிலப்பிரபுத்துவ முறையை உண்டாக்கினார்கள். தங்களுக்கு ஆதரவாக இருந்த, அல்லது தங்களுக்குக் கீழ்ப்படிந்த பழைய அரச பரம்பரை யினருக்கு மன்னர் பட்டம் கொடுத்து அவர்களுக்குத் தங்க ளுடைய மேலாதிக்கத்திற்குட்பட்ட ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ் சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டும் சுதேசி மன்னர்கள் ஆனார்கள். இத்தகைய சுதேசி மன்னர்கள் முந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் உண்டாக்கப்பட்டார்கள். தென் இந்தியாவில் திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை, மைசூர், ஐதராபாத் முதலிய சமஸ்தானாதிபதிகள் அதாவது சுதேசி மன்னர்கள் உண்டாக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பிரதிநிதியான வைஸ்ராயின் மேல் பார்வையில் செயல் பட்டார்கள். உள் நாட்டில் அவர்களுடைய ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வரி வசூல், சட்டம் அமைதி காத்தல், கல்வி, ஸ்தல நிர்வாகம் முதலிய அதிகாரங்கள் அவர்களுக்கு இருந்தது.

இந்த சுதேசி மன்னர்கள் பெரும்பாலும் மக்களுடைய நலன்களில் அக்கறை செலுத்தவில்லை. கொள்ளையான வரிவசூல்களைச் செய்து மிகவும் ஆடம்பர வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். நாளும் வரிக்கொடுமை, அதிகரித்துக் கொண்டு வந்தது. இதனால் மிகப்பெரிய பளுவை விவசாயிகள் சுமக்க வேண்டியதிருந்தது. அதே சமயத்தில் வரிசெலுத்துவதற்கு எந்தவிதப் பிரதிபலனும் கிடைக்காமல் இருந்தது. நீர்ப்பாசன முறைகள் புறக் கணிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த சுதேசி மன்னர்கள், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பாதுகாப்புத் துரணாக, சமுதாய அஸ்திவார மாக இருந்தார்கள்.

இரண்டாவதாக ஆங்கிலேயர்கள், இந்தியாவில் தங்களுக்கு ஆதரவாக இருந்த குறுநில மன்னர்கள், சிறுநில மன்னர் கள். பாளையக்காரர்கள், ஜாகீர்தாரர்கள் முதலியவர் களுக்கு குறிப்பிட்ட கிராமங்களில் வரிவசூல் அதிகாரத்தைக் கொடுத்து அவர்களை ஜமீன்தாரர்கள் ஆக்கினார்கள். இதற்கு ஜமீன்தாரி முறை என்று பெயர். இந்த ஜமீன்