பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.

நோடிப்பட்டா கொடுக்கப்பட்டது.தனது பட்டா நிலத்தை ஒரு விவசாயி விற்பனை செய்யலாம். வேறு பட்டா நிலங்களை விலைக்கு வாங்கவும் செய்யலாம்.

ஆங்கிலேய ஆட்சியில் இவ்வாறு ரயத்து வாரி பட்டா வழங்கப்பட்ட போது, பலர், மேல் தட்டுக்காரர்கள், ஆங்கிலேய கலெக்டர்கள் இதர அதிகாரிகளுக்கு அருகாமையில் இருந்தவர்கள், சற்று விவரம் தெரிந்தவர்கள், மேல் சாதிக்காரர்கள் எனப்பட்டம் பெற்றவர்கள் முதலியோர் ஏராளமான நிலங்களில் தங்களுக்கு பட்டா ஏற்பாடு செய்து கொண்டார்கள். ரயத்து வாரி என்று கூறி நிலம் ரயத்துகளுக்கு நேரடியாக பட்டா கொடுக் கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் எல்லா நிலப் பட்டாதார்களுமே நிலத்தில் சாகுபடி செய்தவர்கள், சாகுபடி செய்து கொண்டிருந்தவர்கள் என்று கூற முடியாது. சாகுபடி செய்யாமல், வாரம் குத்தகைக்கு நிலத்தை சாகுபடிக்குக் கொடுக்கும் ரயத்து வாரி நிலச் சுவான்தார்கள் கையிலும் பெரும்பகுதி சாகுபடி நிலம் போய்விட்டது.

சுதேசி மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் நிலவரி பெரும் பாலும் ஜமீன்தாரர்களுக்கே இருந்தது. இந்த ஜமீன்தாரர் களுக்கு நேரடி சொந்தமாகப் பண்ணை நிலம் என்னும் பெயரிலும் இருந்தது. எனவே ஜமீன்தாரி பகுதிகளில் இருந்த பல ஆயிரக்கணக்கான பண்ணை நிலம், ரயத்து வாரி நிலச் சுவான்களின் ஏராளமான பட்டா நிலம், ஆகிய நிலங்களிலும் மற்றும் மடம் கோயில் இனாம்கள், முதலிய வைகளுக்குச் சொந்தமாக இருந்த நிலங்களிலும் சாகுபடி செய்து கொண்டிருந்த விவசாயிகள் என்று ஒரு பெரிய கூட்டம் உருவானது. இவர்களை வாரம் குத்தகை விவசாயி கள் என்று கூறுகிறோம். நிலம் தங்களுக்குச் சொந்தமாக இல்லாமல் நிலச் சொந்தக்காரர்களுக்கோ ஜமீன்தாரர்களுக் கோ வாரம் அல்லது குத்தகை என்று விளைச்சலில் பெரும் பகுதி கொடுத்து விட்டு நிலத்தில் சாகுபடி செய்து கொண்டி ருந்தவர்கள் இந்த ரகத்தைச் சோந்தவர்களாவர். இவ்வா றாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் விவசாய உற்பத்தி உறவுகளில் விவசாயிகளை, சாகுபடியாளர்களை, சுரண்டிக் கொழுத்துசமுதாயத்தை அழுத்திக் கொண் டிருந்த நிலப்பிரபுத்துவவர்க்கமாக சுதேசி மன்னர்கள் ஜமீன் தார்கள். நிலச் சுவான்தார் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்த நிலப் பிரபுத்துவ சுர ண் டல்முறைவரி, வாரக்கொடுமை கள் விவசாயிகளை அழுத்தி அழித்துக் கொண்டிருந்தன. நிலத்தின் உழைப்பாளர்கள் ஏழ்மை யடைந்து கொண்டி ருந்தார்கள். அத்துடன் நீர்ப்பாசன முறைகளும் புறக்கணிக் கப்பட்டு பாதிக்கப்பட்டது.