பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

பாக கிராமப்புற மக்களுக்கு ஒரு சிறு நம்பிக்கையும் ஏற்பட்டது. அதனால் ஒரு சில காலம் அமைதி நிலவி யிருக்கலாம்.

ஆனால் இந்த அமைதி நீண்ட காலம் நீடிக்கவில்லை. இங்கி லாந்து நாட்டின் பாராளுமன்றத்தின் நேரடியான ஆட்சி இந்தியாவில் ஏற்பட்ட போதிலும் பிரிட்டீஷ் இந்திய அரசு என்பது, பிரிட்டனில் இருந்ததைப் போன்ற பாராளுமன்ற ஜனநாயக அரசாக இல்லை. பிரிட்டனில் இருந்ததைப் போன்ற உரிமைகள் எதுவும் மக்களுக்கு கொடுக்கப் பட வில்லை.இந்திய மக்கள் ஆங்கிலேயர்களால் அடிமைகளைப் போல நடத்தப்பட்டார்கள். இந்தியர்களை நாகரிக மில்லா தவர்கள்என்றும், படிப்பறிவு இல்லாதவர்கள் என்றும் தாங்களே ஆட்சியை நடத்திக் கொள்வதற்கும் ஜனநாயக உரிமைகளை அடைவதற்குப் பக்குவமில்லாதவர்கள் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கூறிவந்தார்கள்.

நிலையான ஆட்சியை ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தியதாகக் கூறிய போதிலும் அந்த அந்நியர் ஆட்சியில் ஏகாதிபத்தியச் சுரண்டல் முன்னிலும் கடுமையாக, முன்னிலும் கொடுமை மிக்கதாக வளர்ந்தது என்பதை ஏற்கனவே முந்திய அத்தியா யத்தில் பார்த்தோம். ‘

1885-ம் ஆண்டில் _ இந்திய தேசீய குருங்கிரஸ் உயத மாயிற்று. அது. தொடக்கத்தில் இந்தியாவில் இருந்த படித்தவர்கள். மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர்,ஆங்கிலக் கல்விகற்றவர்களால் தொடங்கப்பட்ட தேசீய ஸ்தா பனமாகவே இருந்தது. அவர்கள் ப்ெரும்பாலும் மிதவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர்.

இருப்பினும் அதில் பல சிறந்த அறிஞர்களும் சீரிய சிந்தனை ப்ாளர்களும் இருந்தனர். அவர்கள் சிலர் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பொருளாதார சுரண்டல் கொடுமையை ஆர ய்ந்து பல விவரங்களைக் கொடுத்தனர். ஆங்கிலேய ஆட்சியின் வரிக் கொள்கை, வியாபாரக் கொள்கை, மார்க்கட் கொள்ளை-முதலியவைகளைப் பற்றி ஆய்வு செய்து ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து எவ்வளவு செல்வம் கொள்ளை கொண்டு செல்லப்படுகிறது; அதனால் இந்தியா ஆண்டு தோறும் எவ்வாறு ஏழ்மையாகி வருகிறது என்பதை விவரித்தனர்.

மீண்டும் விவசாயிகளிடம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியி லும், 20ஆம்நூற்றாண்டின் தொடக்கத்திலும் கொந்தளிப்பு வெடித்தது. தேசிய இயக்கத்தில் தீவிரவாதிகள் முன்வர ஆரம்பித்தார்கள். ஐரோப்பாவில் இந்தக்காலத்தில் நிலப் பிரபுக்களுக்கும் மன்னராட்சி முறைக்கும். எதிராக மிகவும்