பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 O. இராமப்புற்ப்பாட்டா வளிகளை நோக்கி.

நடத்திய போராட்டம், பம்பாயில் திலகர் கது செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம் முதலிய நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. இவை கிராமப்புற மக்களிடம் புதிய உணர்வுகள்ை உண்டாக்குகின்றன.

1914 ஆம் ஆண்டில் முதலாவது உலகப் போர் தொடங்கியது. போருக்குப் போட வேண்டிய தீனிக்காக இந்திய விவசாயிகள் ஆங்கிலேயர் ஆட்சிய்ால் இன்னும் அதிகமாக சுரண்டப்படுகிறார்கள் ஏராளமான இந்திய கிர்ாம்ப்புற இளைஞர்கள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்கள். o

யுத்த முடிவில் இந்தியாவில் புதிய தேசீயப் போராட்டங் கள் வெடித்தன. கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், தொழிலாளர் இயக்கங்கள், புரட்சிகரமான போராட்டங்கள் முதலியவை எல்லாம் கிராமப்புற இளைஞர்களிடம் புதிய எழுச்சிகளை உண்டாக்கின.

ஆனால்...இப்போது, தேசீய இயக்கத்தின் தலைமையை மிகாத்மா காந்தி ஏற்று தேசீய இயக்கத்தை வெகு ஜனஇயக்கமாக மாற்றினார். இண்டிகோ விவசாயிகளின் இயக்க ம், வரிகொடா இயக்கம் முதலியவை . ணந்தன. இந்திய தேசிய காங்கிரஸின் மகாசபை கிளின் முக்கிய தீர்மானங்களில் விவசாயிகள் பிரச்னை களும் முக்கிய இடம் பெற்றன. கிராமப்புற மக்கள், குறிப்பாக நடுத்தர விவசாயிகள் காங்கிரஸ் ப.கா சபையின் பால் அதிகமான அளவில் ஈர்க்கப்பட்டனர். 1917-ஆம் ஆண்டு நிகழ்ந்த மகத்தான ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் இந்தியாவின் அரசியலிலும் அரசியல் இயக்கத் திலும் ஒரு புதிய வேகம் ஏற்பட்டது.

1920-ஆம் ஆண்டில் அகில இந்திய தொழிற்சங்க காங் கிரஸ் (ஏ.ஐ.டி.யு.சி) என்னும் பெயரில் முதலாவது சுயேச்சையான தொழிலாளர் அமைப்பு தோன்றியது. அதைத் தொடர்ந்து ஆலைத் தொழிலாளர்கள், நகர்ப் புறத் தொழிலாளர்களின் வர்க்க அமைப்புகளாக பல தொழிற்சங்கங்கள் தோன்றின. தொழிலாளி வர்க்கத்தின் ஸ்தாபன ரீதியான இயக்கமும் அம்ைப்புக்களும் வள்ரத் தொடங்கின. தொழிலாளர்கள் தங்களுடைய சொந்தக் கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாமல் நாட்டின் சுதந்திரத் திற்காகவும் அந்நிய ஆட்சியை எதிர்த்தும் குரல் கொடுத் தார்கள். அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ்-சம் தொழிலாளிவர்க்கத்தின் உரிமைகளுக்காகவும், நாட்டின் சுதந்திரத்திற்காகவும் போராடுவதைத் தனது லட்சியமிாக் அறிவித் கத.