பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 43

தேசீய விடுதலைப் போராட்டத்தில் தொழிலாள வ ர்க்கமும் பங்கு கொள்ளத் தொடங்கிய போது சுதந்திரப் போராட்டத்தி ற்கு ஒரு புதிய தன்மையும்

ஏற்பட்டது. தொழி லாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சியை ஒட்டி இந்தி பாவின் முக்கிய நகரங்களில் பம்பாப், சென்னை கல்கத்தா, கான்பூர், லாகூர் முதலிய இடங் களில் கம்யூனிஸ்ட் குழுக்கள் தோன்றின.

தொழிலாளர்களையும் விவசாயிகளையும் விடுதலைப் போராட்டத்தில் ஈர்க்க வேண்டும் என்னும் கருத்து வலு வாக வளர்ந்தது. கிசான் மஜ்துார் கட்சி என்னும் பெயர் களில் விவசாயிகள் தொழிலாளர் கட்சிகளும் தோன்றின. மேலும் அந்தக் கருத்து வளர்ந்தது.

1925 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் . கட்சி தோன்றியது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பகுதியாக, மூன்றாவது அகிலத்தின் அங்கமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது. பரிபூரண சுதந்திரம், (முழுமையான நாட்டு விடுதலை) விடுதலைப் போராட்டத் தில் தொழிலாளி விவசாயிகளின் பங்கு, விஞ்ஞான சோஷலிஸ் த்தின் திசை வழி முதலிய கருத்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆங்கிலேயர் ஆட்சியால் தடை செய்யப்பட்டது. அக்கட்சியின் தலைவர்கள் மீது சதி வழக்குகள் போடப் ட்டு அவர்கள் சிறையில் வைக் கப்பட்டனர். சதி வழக்குகள் நடை பெற்றபோது நீதி மன்றங்களில் அவர்கள் கொடுத்த வாக்கு மூலங்களே அவர்களுடைய கொள்கை அறிக்கைகளாகப் பல பத்திரிகை களில் வெளியிடப்பட்டு பிரபலமடைந்து பரவின.

1928-29ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட உலக முதலாளித் துவப் பொருளாதார நெருக்கடி பிரிட்டிஷ் இந்தியாவின் .ெ பாருளாதாரத்தையும் மிகவும் கடுபையாக பாதித்தது. அதில் இந்திய விவசாயிகளுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி கடுமை யானது. லட்சக்கணக்கான விவசாயிகள் திவாலானார் கள். அவர்களுடைய உற்பத்திப் பொருள்கள் அ ைசிப வில்லை வாங்குவாரின்றித் தேங்கிக் குவிந்து விட்டது. இந்த வியாபார மந்தம், விவசாயிகளை படு நாசத்தில் தள்ளிவிட்டது. விவசாயிகள் எல்லாம் கடனாளிகளாகி, நிலத்தையே விற்றுக் கடன் கட்ட வேண்டியதாயிற்று. வரி கட்ட முடியாமல் கொஞ்ச நஞ்சம் இருந்த சொத்துக் களையும் ஆடு மாடுகளையும் வீட்டுக் கதவு நிலை களையும் ஜப்தியில் இழந்தார்கள், சுதேசி மன்னர்களின் ஆட்சியின் கீழும் ஜமீன்தார்களின் நிர்வாகத்திலும் இருந்த விவசாயிகள் இன்னும் அதிகமாகக் கஷ்டப்

பட்டார்கள்.