பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 15

பேரவைகள், அமைப்பு நிலைக்கூட்டங்களில் விவசாயிகளின் பிரச்சனைகள், கோரிக்கைகள், விவசாயப் பொருளாதாரத் தைப்பற்றிய ஆய்வுரைகள், விவசாயிகள் பால், விவசாயத் துறையின் பால் அரசின் கொள்கைகள் முதலியவை பற்றி விவாதிக்கப்பட்டன. பல தீர்மானங்கள் நிறைவேற்றப் படடன.

விவசாயிகள் மீதான வரிக் கொள்கையைக் கண்டித்து,

யிவசாயிகளுக்குக் கடன் நிவாரணம் கோரி, சாகுபடி யாளர்களுக்குப் பாதுகாப்பு கோரி, நில வெளியேற்றத்தைத் தடுக்கக்கோரி, நியாய வாரம் கோரி, உழுபவனுக்கே

நிலம் வேண்டும் என்று கேட்டு, ஜமீன் இனாம் முறை கனள ஒழிக்கக் கோரி, முழுமையான நிலச் சீர்திருத்தம் கோரி, நீர்ப்பாசன வசதிகளை அதிகரிக்கக் கோரி, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கோரி, விவசாயிகளுக்கும் இதர உழைக்கும் மக்கள் பகுதி களுக்கும், முழுமையான ஜனநாயக உரிமைகள், அரசியல் உரிம்ைகள் கோரி, அந்நிய ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை கோரித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடெங்கிலும், உலகின் எந்தப் பகுதியிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும் அரசாங்கத்தின் அடக்குமுறைச் சட்டங்களைக் கண்டித் தும், போலீஸின் அடக்கு முறைக் கொடுமைகளைக் கண்டித்தும் பல தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டன. பல கிளர்ச்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் திட்டமிடப் படடன.

தேசியக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டங்களிலும் தொழிற் சங்க காங்கிரஸின் கூட்டங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான தீர்மானங்கள் முன் மொழியப்பட்டன. தொழிலாளி விவசாயி ஒற்றுமை குறித்தும் ஒன்றுபட்ட இயக்கம் பற்றியும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப் படடன.

1935ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் சமஷ்டி அரசியல் சட்டத்தை காங்கிரஸ்மகாசபை ஆரம்பத்தில் எதிர்த்த போதிலும், பின்னர் அதை ஏற்று 1937ஆம் ஆண்டில் ந டு முமுவதிலும் மாநில சட்ட மன்றங்களுக்கும், மத்திய சட்ட சபைக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் குறுகிய வாக்கு முறையே இருந்தது. படித்தவர்கள், பட்டதாரிகள் ஆகியவர்களுக்கு மட்டுமே ஒட்டுரிமை இருந்தது. இந்தத் தேர்தல்கள் சுதேதி சமஸ் தானங்கள் தவிர்த்த நேரடியான பிரிட்டிஷ் இந்திய ஆட்சி யின் கீழ் இருந்த மாகாணங்களில் தான் நடைபெற்றது.

அப்போதிருந்த முக்கிய மாகாணங்கள் சென்னை பம்பாய், வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸா, மத்திய மாகாணம்