பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

ஐக்கிய மாகாணம் (இப்போதைய உத்திரப் பிரதேசம்) பஞ் சாப்,சிந்து, எல்லைப்புற மாகாணம் ஆகியவைகளாகும்.

சென்னை மாகாணம்என்பது கன்னியாகுமரி, புதுக்கோட்டை செங்கோட்டை தவிர பாக்கியுள்ள தமிழகம் முழுவதும், இன்றைய கேரளத்தில் உள்ள மலபார்பகுதியும், இன்றைய கிர் நாடகத்தில் உள்ள தென்கன்னடம், பல்லாரி பகுதியும் இன்றைய ஆந்திரப்பிரசேத்திலுள்ள ரா யலசீமா, ஆந்திரா ப்குதிகளும், இன்றைய ஒரிசாவில்உள்ள கஞ்சம் மாவட்டப் பகுதியும் கொண்டதாக இருந்தது.

1937ஆம் ஆண்டு நடை பெற்ற குறுகிய வாக்குரிமை களைக்கொண்ட தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங் களில் காங்கிரஸ் மகாசபை வெற்றிபெற்றது. குறிப்பாக சென்னை, பம்பாய், மத்திய மாகாணம், ஐக்கியமாக ணம், பீகார், அஸ்ஸாம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் முதலியவற்றில் காங்கிரஸ் வெற்றி பெற்றது

சென்னை மாகாணத்தில் 1937ஆம் ஆண்டிற்கு முன் ஜஸ்டிஸ் கட்சியின் ஆட்சி இருந்தது. ஜஸ்டிஸ் கட்சியில் பெரிய ஜமீன் தார்கள்,பெரிய் விர்த்தகர்கள், தருகுமுதலாளி கள் ஆங்கிலேயர் ஆட்சியுடன் சார்ந்திருந்த சிலபடிப்பாவி கள் ஆகியோர் இருந்தார்கள். பொதுவாக ஜஸ்டிஸ்கட்சி ஜமீதார்களின் கட்சியாகவே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு ஆதர வான கட்சியாகவே மக்கள் கருதினார்கள். இந்த ஜஸ்டிஸ் கட்சியின் அலுவலக செயலாளர் என்ற விதத்தில்தான் சி. என். அண்ணாதுரை முதன்முதலில் அரசியலில் ஈடு L/ L — L fTTT.

சென்னை மாகாணத்தில் காங்கிரஸ்கட்சி மிதவாதிகளின் தலைமைப்பிடிப்பில் இருந்தது. காங்கிரஸ் கட்சியின்

தலைமையில் சேலம் விஜயராகவாச்சாரியார், இராமநாதபுரம் சீனிவாச அய்யங்கரர், சத்தியமூர்த்தி. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், திருச்சி

டி.எஸ்.எஸ். ராஜன், மதுரை வைத்தியநாதய்யர், டங்குடுரி பிரகாசம் பந்துலு முதலிய பெரிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தார்கள்.

இவர்கள் எல்லாம் பெரிய படிப்பாளிகளாகவும் அறிவாளி களாகவும், தேசீய விடுதலைப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இருப்பினும் இவர்களை பிராமணத் தலைவர்கள் ஏன்று கட்சியினர் கூறினார்கள். காங்கிரஸ் கட்சியில்

ராமணர்கள் மட்டுமல்ல, திரு.வி. கல்யாண சுந்தர முதலியார், திரு.வி. சக்கரைச் செட்டியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு, முத்துரங்க முதலியார், வேலூர் குப்புசாமி முதலியார், ஒமந்துார் ராமசாமி ரெட்டியார்,