பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

சென்னை மாகாணத்தில் தமிழ் நாடு, கேரளம், ஆந்திரா ஆகிய மூன்று பகுதிகளிலும் காங்கிரஸ் சோஷலிட் கட்சியில் மேலே குறிப்பிட்டுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களே முக்கிய தலைம்ைப் பொறுப்புகளில் இருந்து பணியாற்றி வந்தார் கள். இந்த சமயத்தில் தான் தமிழ் நாட்டில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பத்திரிகையாக ஜன சக்தி’ தொட்டங்கப்பட்டது. 1937 தேர்தல் முடிந்து சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று, சி. ராஜ கோபாலாச்சாரியார் தலைமையில் முதலாவது காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்ட பின்னரே அது தொடங்கப் பட்டது. -

காங்கிரஸ் சோஷலிஸ்ட்டு கட்சியின் பெயரில் செயல் பட்டு வந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள், சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியின் பணிகளில் தீவிரமாகப் பங்காற்றினார் கள். முக்கியமாக தொழிலாளர்கள் விவசாயிகள் சம்பந்த மான பல தீர்மானங்களை உருவாக்குவதில், நிறைவேற்று வதில் முக்கிய பங்கு வகித்தார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வெகு ஜன அடிப்படையைக் கொடுத்து பல முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட பார்வையைக் கொடுப்பதில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர்கள் முக்கிய பங்கு

ஆற்றினார்கள்.

1936-37 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தில் ஜீவானந்தம், பி ராமமூர்த்தி இ எம்.எஸ். நம்பூதிரி பாத், ஏ.கே.கோபாலன், பி. சுந்தரய்யா முதலிய காங்கிரஸ் சோஷலிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க, விவசாயி கள் சங்கத்தலைவர்கள் மிகவும் முக்கியமான பங்கை ஆற்றி னார்கள். இவர்கள் ஏராளமான தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டதால் தேர்தல் பிரச்சாரத்தில் தொழிலாளர்கள் விவசாயிகளின் பிரச்னை களும் கோரிக்கைகளும் முக்கிய இடம் பெற்றன. குறிப்பாக வரிக்கொடுமை, கடன் சுமை, ஜமீன்தாரி முறையின் சுரண்டல் கொடுமை முதலிய பிரச்னைகள் தேர்தல் பிரச் சாரத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன இந்த தேர்தல் பிரச்சார இயக்கம் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் பிரச்னைகளுக்கும் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு புதிய விவசாய சாயலைக் கொடுத்தது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குப் பிடிப்பில் பெரும்பாலான விவசாயிகள் வருவதற்கான காரணங்களில்

ஒன்றாகவும் அது அமைந்தது.

தமிழகத்தில் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள் 1930ஆம் ஆண்டிற்கு முன் இந்திய தேசீய காங்கிரஸில் தமிழ் நாட்டில் முக்கிய பொறுப்பில் இருந்தார். சாதிப் பாகுபாடு பற்றி அவருக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்த இதர